சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"உரசி" நிற்கிறது பாஜக..திமுகவுக்கு சிக்கலே.. "பாரத் மாதாகீ ஜே".. சீண்டிய முரசொலிக்கு கமலாலயம் பதிலடி

முரசொலி நாளிதழ் கட்டுரைக்கு, தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "பாரத் மாதாகீ ஜே என்று சொல்வதால் இந்தியாவை வளர்த்து விட முடியாது" என்ற தலைப்பில், முரசொலி கட்டுரை வெளியிட்டிருந்த நிலையில், தமிழக பாஜக, இதனை கடுமையாக விமர்சித்து பதிலடி தந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில், மனோரமா செய்தி நிறுவனத்தின் கான்க்ளேவ் 2022 நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது முதல்வர் பேசும்போது, "மொழிவாரி மாநிலங்களை நேரு உருவாக்கினார். இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தினார். பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி கொடுத்தார்.

சகோதரத்துவத்தை வலியுறுத்தியதோடு, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை மாற்றினார்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு முதலமைச்சர்களிடம் கடிதம் வாயிலாக பேசினார். இதனால் தான் இந்தியா 75 ஆண்டுகள் வலிமையாக நின்றுகொண்டுள்ளது. இந்தியா மேலும் வலிமையாக இருக்க வேண்டும் என்றால், ஜனநாயக கருத்துகளை தொடர்ந்து பேச வேண்டும்.

ஒரேநேரத்தில் 5 பேரிடம் தங்கதாலி பறிப்பு.. கதறிய பெண்கள்.. திருவண்ணாமலை திருக்கல்யாணவிழாவில் கண்ணீர் ஒரேநேரத்தில் 5 பேரிடம் தங்கதாலி பறிப்பு.. கதறிய பெண்கள்.. திருவண்ணாமலை திருக்கல்யாணவிழாவில் கண்ணீர்

 சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

சமத்துவம் மாநில சுயாட்சு, சகோதரத்துவம், சமூக நீதி கருத்துகளை வலியுறுத்தினால் மட்டுமே நாடு நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும். ஆனால், நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக உரிமையே மறுக்கப்படுகிறது. திமுக எம்பி-க்கள் உட்பட 27 எம்பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். களத்தில் கூட கருத்து பேச முடியாத நிலை இருக்கிறது.. இந்தியாவுக்கு ஒரே தேசிய மொழி என்பது சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள்" என்று பேசியிருந்தார்.

தலையங்கம்

தலையங்கம்

இந்நிலையில், முரசொலி நாளிதழ் இன்றைய தலையங்கத்தில், முதல்வரின் திருச்சூர் உரையை பதிவிட்டுள்ளதுடன், பாஜகவையும் விமர்சித்துள்ளது.. அந்த சுருக்கம்தான் இது: "இந்தியா, இந்தியா என்று பேசுவதாலோ, பாரத தேசம் என்றும் இழுத்துச் சொல்வதாலோ, ‘பாரத் மாதாகீ ஜே' என்று குரல் எழுப்புவதாலோ இந்தியாவை வளர்த்து விட முடியாது. இந்தியாவை வளர்க்க மக்களை வளமுள்ளவர்களாக மாற்ற வேண்டும். மக்களை வளமுள்ளவர்களாக மாற்றும் கடமையும் பொறுப்பும் மாநில அரசுகளிடம் இருக்கிறது. அத்தகைய மாநில அரசுகளை மதிக்க வேண்டும். அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். உதவிகள் செய்யப்பட வேண்டும்.

உரசுகிறது

உரசுகிறது

அதை விடுத்து மாநிலங்களை அடிமைகளாக நடத்தும் பாணி என்பது இந்தியாவை வளர்க்காது என்பதை முதலமைச்சரின் திருச்சூர் உரை தெளிவுபடுத்துகிறது. இந்தியா முழுமைக்கும் ஆளும் பா.ஜ.க. கட்சியானது எதில் அக்கறை செலுத்த வேண்டுமோ அதில் அக்கறை செலுத்தவில்லை. எதிலிருந்து விலகி இருக்க வேண்டுமோ அதில் உரசிக் கொண்டு கிடக்கிறது. அது தான் இன்றைய அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். ஒற்றைத் தன்மைக் கோட்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து, பன்மைத் தன்மைகளை ஏற்றுச் செயல்படும் ஆட்சியாக ஒன்றிய பாஜக ஆட்சி செயல்பட வேண்டும் என்பதையே ஜனநாயக சக்திகளின் கோரிக்கையாக இருக்கிறது.

 நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது அந்தந்த மாநில மக்களின் உடைகளை பிரதமர் அணிவது வரவேற்கத்தக்கது... பன்மைத்துவத்தை அவரது உடை ஏற்கிறது. உள்ளம் ஏற்க வலியுறுத்துகிறது திருச்சூர் தீர்ப்பு! என்று முரசொலி பதிவிட்டுள்ளது.. இதற்கு தமிழக பாஜக எதிர்வினையாற்றி உள்ளது.. முரசொலிக்கு கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.. மாநில பாஜக துணை தலைவர் திருப்பதி நாராயணன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்..

 சிக்கல்கள் - திமுக

சிக்கல்கள் - திமுக

அதில், "ஊழல் செய்வதில், முறைகேடுகளில் அக்கறை செலுத்தவில்லை பாஜக. ஊழல் மற்றும் லஞ்சப் பேர்வழிகளிடமிருந்து விலகி நிற்காது அவர்களை உரசி கொண்டிருக்கிறது. தடுத்து நிற்கிறது. அது தான் திமுக போன்ற எதிர்க்கட்சிகளின் சிக்கல்கள் அனைத்துக்கும் காரணம் ஆகும்" என்று காட்டமாக கூறியுள்ளார்... இதையடுத்து, நாராயணன் திருப்பதிக்கு திமுகவினர் பலரும் திரண்டு வந்து பதிலடி தந்து வருகிறார்கள்..

Recommended Video

    Kanimozhi Speech | தக்காளி, வெங்காயம் விலை குறைந்தால் போதுமா? - கனிமொழி எம்.பி *Politics
     பிஎம் கேர்ஸ்

    பிஎம் கேர்ஸ்

    அத்துடன் தங்களின் சில கேள்விகளையும் தமிழக பாஜகவிடமே எழுப்பி வருகிறார்கள்.. குறிப்பாக, "ரஷ்யா மலிவாக தந்தாலும் பெட்ரோல் டீசல் கேஸ் விலைஉயர்வு ஏன்? டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு ₹80க்கு வீழ்ச்சி ஏன்? அரசு நிறுவனங்களை விற்றும் அதிக வரி விதித்தும் ₹100 லட்சம் கோடிக்கு மேல் கடன் ஏன்?அம்பானி அதானிக்கு கடன் & பல்வேறு வரி தள்ளுபடி ஏன்? இந்த ஊழல் எல்லாம் செய்தது யார்? பணமதிப்பிழப்பு, பிஎம் கேர்ஸ், electrol bond, இதெல்லாம் இந்திய ஒன்றியம் கண்டிராத மெகா ஊழல்கள்தானே" என்றும் பதில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    English summary
    "Saying 'Bharat Mataki Jai' will not make India grow" and tn bjp condemns dmks Murasoli article முரசொலி நாளிதழ் கட்டுரைக்கு, தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X