எஸ்பிஐ வங்கியில் 11 கிலோ தங்கம்.. அன்று கேஸ் கட்டரில் லாக்கரை உடைத்தது.. இன்று ஆந்திரா போலீஸ் அதிரடி
சென்னை: ஆந்திராவின் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் உள்ள துமுகுண்டா கிராமத்தில் செயல்பட்டு வரும் எஸ்.பி.ஐ. வங்கி கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அடங்காத நிலையில், அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட கொள்ளையில், தொடர்புடையவர்கள் தற்போது சிக்கி உள்ளனர். இதுகுறித்த விவரங்களை ஆந்திர மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 27ம் தேதி, ஆந்திராவின் துமுகுண்டா கிராமத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு கொள்ளை கும்பல் ஒன்று நுழைந்துள்ளது.. இரவு நேரத்தில் உள்ளே புகுந்த கும்பல், வங்கி லாக்கரில் இருந்த 11 கிலோ தங்க நகைகள் மற்றும் 38 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தது..

அத்துடன் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் அழித்துவிட்டு தப்பியது.
லாக்கரில் 11 கிலோ தங்கம்
மறுநாள் காலை வழக்கம்போல் வங்கியை திறக்க வந்த ஊழியர், வங்கியில் பணம், நகை கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.. உடனடியாக வங்கி மேலாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகே இந்த கொள்ளை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மிகவும் பிரபலமான எஸ்பிஐ வங்கியின் இந்த கிளையில் செக்யூரிட்டி இல்லையாம்.. கொள்ளையர்களுக்கு இதுதான் வசதியாக இருந்திருரக்கிறது.. எனவே நோட்டமிட்டும், திட்டமிட்டும் இந்த கொலையை அரங்கேற்றியிருந்தனர்..
இந்த கொள்ளை நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுதொடர்பாக குற்றவாளி ஓருவர் சிக்கி உள்ளார்.. சத்தியசாய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சதீஷ் குமார் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார்..
2வது குற்றவாளி கைது
அப்போது, "ஹிந்துபூர் துணைப் பிரிவின் கீழ் வரும் துமுக்குண்டா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த கொள்ளை நடைபெற்றது. கேஸ் கட்டர் மூலம் எஸ்.பி.ஐ. வங்கி லாக்கரை உடைத்து 11 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது..
வந்த வங்கி திருட்டு வழக்கில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.5.54 கோடி ஆகும்.. சம்பவம் நடந்த உடனேயே ஹிந்துபூர் ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே முதல் குற்றவாளியான அனில் பன்வார் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 2 கிலோ தங்க நகைகள், ரூ.2 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டன.
5.5 கிலோ தங்க நகைகள்
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இரண்டாவது குற்றவாளியான இஷ்ரார் கான் ராஜஸ்தானில் இருப்பது தெரியவந்தது.. எனவே தற்போது அங்கு சென்று போலீசார் அவரை கைது செய்துள்ளனர்..
கொள்ளையர்களில் மிக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இவரது பெயர் மொஹம்மத் இஷ்ரார் கான் .. இவருக்கு இக்ரார் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. 45 வயதான இந்த கொள்ளையன் ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டம் சலேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்..
கைது செய்யப்பட்ட கொள்ளையனிடம் இருந்து 5,500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை சுமார் ரூ.5.5 கோடி மதிப்புடையவை ஆகம்.. அத்துடன் ரூ.3.52 லட்சம் மதிப்புள்ள சிட்டி கார், 48 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. மொத்தமாக இந்த வழக்கில் 5.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர போலீஸ் அட்வைஸ்
கைதாகி உள்ள இந்த 2 குற்றவாளிகளும், பல மாநிலங்களில் வங்கி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள்.. இதுசம்பந்தமாக கைதாகி ஜெயிலுக்கும் சென்று வந்தவர்கள்.. அப்போதுகூட, மீண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. அந்தவகையில், இந்த 2 கொள்ளையர்களுக்கு எதிராக பல மாநிலங்களில் மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எப்போதுமே பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.. சந்தேகமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.. வீடுகள் மற்றும் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியும்" என்று அறிவுறுத்தினார்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications