SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? உங்க எஸ்.பி.ஐ அக்கவுண்ட் வெளியூர் பிரான்ஞ்சில் இருக்கா? ஈஸி
சென்னை: SBI எனப்படும் பாரத் ஸ்டேட் வங்கியில், உங்களுக்கு கணக்கு இருக்கிறதா, இல்லையா? புதிதாக அக்கவுண்ட் துவங்க வேண்டுமா? அப்படியானால் ஆன்லைனிலேயே ஆரம்பிக்கலாம்.. ஒருவேளை உங்க வங்கிக்கணக்கு வெளியூரில் இருந்தாலும், அதையும் ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். ரொம்ப சுலபம்.
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநராக விளங்கி கொண்டிருக்கிறது எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி.. இந்த வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வழியாகவே, பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, கணக்கை துவங்குவது முதல் பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.

ஆன்லைன் வசதி: முன்பெல்லாம் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டுமானால், நேரில்தான் செல்ல வேண்டியிருந்தது.. ஆனால், இப்போது, வீட்டிலிருந்தபடியே, அதுவும் 5 நிமிடத்தில் கணக்கை துவங்கிவிடலாம். இதற்கு சில முக்கிய ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும.
ஆவணங்கள்: இந்த வங்கிக்கணக்கை துவங்க, பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். (இவைகளில் ஏதாவது ஒரு ஆவணம்) கண்டிப்பாக தேவை.
அதேபோல, ரேஷன் கார்டு, கரண்ட் பில், போன் பில், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, கடந்த 2 மாத வங்கி அறிக்கை. (இவைகளில் ஏதேனும் ஒன்று முகவரி சான்று ஆவணமாக தேவை), 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை. (இவைகளில் ஏதாவது ஒன்று வயதுச்சான்று ஆவணங்களாக தேவை)
தகுதிகள் இதுதான்: யார் வேண்டுமானாலும் வங்கி கணக்கை துவங்கிவிட முடியாது. வங்கி கணக்கை துவங்க வேண்டுமானால், விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.. சேமிப்பு கணக்கிற்கு விண்ணப்பிக்கும்போது, தனிநபர் குறைந்தபட்சம் 18 வயது முழுமையடைந்தவராக இருக்க வேண்டும்..
அதேபோல விண்ணப்பதாரர் மைனராக அதாவது 18 வயதுக்கு கீழே இருந்தால், அவர்கள் சார்பாக பெற்றோர்/பாதுகாவலர்கள் கணக்கைத் திறக்கலாம்.. விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அடையாள மற்றும் முகவரி சான்றினை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
- முதலில் SBI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று, "சேமிப்பு வங்கி கணக்கு" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, Apply Now என்ற பட்டனை கிளிக் செய்து, "சேமிப்பு கணக்கு" என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்போது கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி, "Submit" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- இப்போது வங்கி கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வளவுதான், 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் உங்கள் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு திறக்கப்படும்.
டிரான்ஸ்பர்: அதேபோல, அக்கவுண்ட் துவங்குவதற்கு, எஸ்பிஐ வங்கியின் "யோனோ" ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உடனடியாக டிஜிட்டல் சேமிப்பு கணக்கு திறப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் வங்கிகளுக்கு செல்லாமலேயே, வங்கி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவதற்கு இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்குகள் உதவுகின்றன. இதற்கு என்ன செய்ய வேண்டு தெரியுமா?
முதலில், செல்போனில் யோனோ (Yono) ஆப்பை டவுன்லோட் செய்துக்கொண்டு, உங்களது பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை தரவேண்டும். இப்போது உங்கள் செல்போனுக்கு ஓடிபி (OTP) வந்துவிடும்.. இறுதியில், பாஸ்வேர்டை பதிவிட்டு, கூடுதல் விவரங்களையும் நிரப்பினாலே, கஸ்டமர்களுக்கான வங்கிக்கணக்கு உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
வங்கிக்கிளை: அதேபோல உங்கள் சேமிப்பு கணக்கு வெளியூரில் இருந்தால், அதையும் ஆன்லைனில் எளிதாக மாற்றிக்கொள்ளலாம். வங்கிக் கிளையை ஒரு கிளையிலிருந்து, கணக்குகளை மாற்ற இந்த வழிமுறைகளை கையாண்டால் போதும்.
-www.onlinesbi.com என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட் மூலமாக நுழைந்து, "தனிப்பட்ட வங்கி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்களது பெயர், பாஸ்வேர்ட் தந்து உள்ளே நுழைந்து, "இ-சர்வீசஸ்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- "சேமிப்புக் கணக்கின் பரிமாற்றம்" என்பதை தேர்ந்தெடுத்தால், கணக்கு எண் மற்றும் கிளை பெயர் உள்ளிட்ட கணக்கு விவரங்கள் ஸ்கிரீனில் தெரியும். இப்போது நீங்கள் மாற்ற விரும்பும் கணக்கை தேர்ந்தெடுத்து, கிளைக்குறியீட்டையும், கிளை பெயரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- கிளைக்குறியீடு மற்றும் புதிய கிளைக் குறியீட்டை பயன்படுத்தி கணக்கு பரிமாற்ற விவரங்களை சரிபார்க்க வேண்டும்... இப்போது, பதிவு செய்யப்பட்ட உங்கள் செல்போன் நம்பருக்கு OTP வரும்.
- இறுதியாக, "உறுதிப்படுத்தல்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, OTP நம்பரை அதில், பதிவிட்டு, "உறுதிப்படுத்து" என்பதைக் கிளிக் செய்தால் போதும். உங்களது கிளை பரிமாற்ற கோரிக்கை பதிவு செய்யப்பட்டுவிடும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications