எஸ்.பி.ஐ அக்கவுண்ட் இருக்கா? உங்க SBI வங்கி கணக்குடன்.. புதிய செல்போன் நம்பரை இணைக்க தெரியுமா? ஈஸி
சென்னை: எஸ்பிஐ எனப்படும் பாரத் ஸ்டேட் வங்கியில், நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்களா? உங்களது பழைய மொபைல் நம்பரை மாற்றி, புதிய செல்போன் நம்பரை எப்படி இணைப்பது தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநராக திகழுவது பாரத ஸ்டேட் வங்கி.. தன்னுடைய ஏராளமான வாடிக்கையாளர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், எஸ்பிஐ பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது.

ஆன்லைன் வசதி: குறிப்பாக, ஆன்லைனில் நீங்கள் 5 நிமிடத்திலேயே கணக்கை ஆரம்பிக்கலாம்.. உங்கள் சேமிப்பு கணக்கு வெளியூரில் இருந்தாலும், அதையும் ஆன்லைன் மூலமே டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். அதேபோல ஏடிஎம் கார்டுகளையும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.. உங்கள் சேமிப்பு கணக்கு வெளியூரில் இருந்தால், அதையும் ஆன்லைனில் நீங்கள் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
வங்கிக் கிளையை ஒரு கிளையிலிருந்து, ஆன்லைன் மூலமாக கணக்குகளை மாற்ற இந்த வழிமுறைகளை கையாண்டால் போதும். அதேபோல, வங்கி கணக்கில் புது செல்போன் நம்பரையே பதிவிட வேண்டும்.
செல்போன் நம்பர்: எனவே, பழைய செல்போன் நம்பர் பதிவாகியிருந்தால், அதை நீக்கிவிட்டு, புதிய செல்போன் நம்பரை கட்டாயமாக வங்கிக்கணக்கில் இணைப்ப வேண்டும். இதற்கும் ஆன்லைனிலேயே வழி உள்ளது. எப்படி தெரியுமா?
- www.onlinesbi.com என்ற வெப்சைட்டிற்குள் சென்று profile என்ற பக்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
- ஸ்கிரீனில் தெரியும் "Personal Details" என்ற லிங்க்கிற்குள் சென்று, "profile password" ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- 'Change Mobile Number-Domestic only (Through OTP/ATM)' என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்போது ஸ்கிரீனில் 'Personal Details-Mobile Number Update' பக்கத்தில் "Create Request" என்பதை தந்து, புதிய செல்போன் நம்பரை பதிவிட வேண்டும்.
- இறுதியாக 'Submit' என்ற பட்டனை கிளிக் செய்து உறுதி செய்ய வேண்டும். இப்போது உங்களது புதிய போன் நம்பர் ஸ்கிரீனில் தெரியும். அதை ஒருமுறை சரிபார்த்துவிட்டு, 'ஓகே' தரவேண்டும்.
- இப்போது, உங்களது புதிய மற்றும் பழைய செல்போன் நம்பருக்கும், OTP வந்துவிடும்.. இதற்குபிறகு உங்களது புதிய நம்பர் வங்கி கணக்கில் அப்டேட் செய்யப்பட்டுவிடும்.
டிரான்ஸ்ஃபர்: அதேபோலவே, அக்கவுண்ட் துவங்குவதற்கு, எஸ்பிஐ வங்கியின் "யோனோ" ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உடனடியாக டிஜிட்டல் சேமிப்பு கணக்கு திறப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, நீங்கள் வங்கிகளுக்கு செல்லாமலேயே, வங்கி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவதற்கு இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்குகள் உதவுகின்றன. இதற்கு என்ன செய்ய வேண்டு தெரியுமா?
யோனா ஆப்: முதலில், செல்போனில் யோனோ (Yono) ஆப்பை டவுன்லோட் செய்துக்கொண்டு, உங்களது பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை தரவேண்டும். இப்போது உங்கள் மொபைல் நம்பருக்கு ஓடிபி (OTP) வந்துவிடும்.. இறுதியில், பாஸ்வேர்டை பதிவிட்டு, கூடுதல் விவரங்களையும் நிரப்பினாலே, கஸ்டமர்களுக்கான வங்கிக்கணக்கு உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துவிடுமாம்..












Click it and Unblock the Notifications