SBI பேங்க் அதிரடி.. தமிழக அரசு பஸ்களில் வருகிறது டிக்கெட் கருவிகள்..ஆச்சரியம் தந்த பாரத ஸ்டேட் வங்கி
சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அதிரடிகளை செய்துவரும் தமிழக போக்குவரத்து துறை, தற்போது மீண்டும் ஒரு அதிரடியை கையில் எடுக்க போகிறது.
தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கு டிக்கெட்டு வழங்கும் வகையில், மின்னணு பயணச்சீட்டு கருவிகள் 16 வருடங்களுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டன. பிறகு கடந்த 2011-ல், அதி நவீனபயணச்சீட்டு கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்க அரசு திட்டமிட்டது.

இதற்காக மத்திய அரசின் நிதியுதவியுடன் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, சுமார் 30 ஆயிரம் கருவிகள் ஒப்பந்த அடிப்படையிலும் வாங்கப்பட்டிருந்தன. ஆனாலும், புதிதாக வாங்கப்பட்ட கருவிகளில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் அவை திரும்பப் பெறப்பட்டுவிட்டன.
கண்டக்டர்கள்: இந்நிலையில், அதைவிட அதிநவீன டிக்கெட் கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கருவி மூலம், பஸ்ஸில் பயணம் செய்பவர்களுககு எளிதாக டிக்கெட் விநியோகிக்க முடியும்.. கண்டக்டருக்கும் பணி எளிதாகும்.. இதன்மூலம், ஒவ்வொரு பஸ்ஸிலும் வழங்கப்படும் டிக்கெட்டுகள் பற்றிய விவரங்கள், பணிமனைகள, மண்டல மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரியவரும்.
டிக்கெட் வழங்கும்போதே, பயணிகளின் எண்ணிக்கை அவர்கள் செல்லும் தூரம், பஸ்களில் இடம் இருக்கிறதா? பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா? போன்ற விவரங்களும், போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கு தெரியவரும். இந்த கருவிகள் ஒப்பந்த நிறுவனத்திடமிருந்து வரத் தொடங்கியிருப்பதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், கடந்த அக்டோபரிலேயே செய்திகள் வெளியாகியிருந்தன.
டிக்கெட்கள்: இந்நிலையில் மீண்டும் பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, போக்குவரத்துக் கழகங்களுக்கு 38 ஆயிரம் பயணச்சீட்டு கருவிகளை இலவசமாக வழங்க பாரத ஸ்டேட் வங்கி தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் சொல்லும்போது, "ஒரே அட்டையை பயன்படுத்தி பொதுப்போக்குவரத்து வாகனங்கள் அனைத்திலும் பயணச்சீட்டு பெறும் வகையில் என்சிஎம்சி என்ற அட்டையை கடந்த வருடம் மத்திய அரசு அறிமுகம் செய்திருந்தது. இந்த அட்டையை தற்போது, பயன்படுத்த வேண்டுமானால் பொது போக்குவரத்தில் பயணச்சீட்டு கருவியின் பயன்பாடு அவசியம்.
பயணச்சீட்டு: அதனால், சுமார் 38 ஆயிரம் பயணச்சீட்டு கருவிகள் வரை போக்குவரத்துக் கழகங்களுக்கு இலவசமாக வழங்க பாரத ஸ்டேட் வங்கி தயாராக உள்ளது.. இது வெற்றியடையும் பட்சத்தில், முதல்வர் இந்த திட்டத்தைதொடங்கி வைப்பார். இந்த கருவிகளுக்கான சர்வர், காகித பயன்பாடு மட்டுமே போக்குவரத்துக் கழகங்களுக்கான செலவினங்களாக இருக்கும்" என்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications