SBI WeCare Deposit: மூத்த குடிமக்களுக்கு அதிரடி ஆஃபர்! அதிக வட்டியின் பலனை அள்ள தயாரா!
சென்னை: மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பான முதலீடு திட்டத்தை SBI வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்.
பாதுகாப்பான, ஆபத்து குறைவான முதலீடாக இது இருப்பதால் மூத்த குடிமக்கள் இதில் நம்பி முதலீடு செய்யலாம். இதன் சிற்பம்சமே வட்டி விகிதம் அதிகம் என்பதுதான்.

வயதாகிவிட்டாலே எல்லோரும் நம்மை ஓரம்கட்டி வைத்துவிடுவார்கள். அன்றாட தேவைகளுக்கு கூட மற்றவர்களை எதிர்பார்த்திருக்க வேண்டிய சூழல் வரும். இதனை தவிர்க்க வேண்டும் எனில், சொந்த சேமிப்பு முக்கியம். ஆனால் எங்கு சேமிப்பது? எதில் முதலீடு செய்வது? எது பாதுகாப்பான முதலீடு? உள்ளிட்ட கேள்விகள் எழுலாம். இதற்கான சரியான பதில், SBI WeCare Depositதான். மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பான, அதே நேரம் நம்பகமான அதிக வட்டியுடன் கூடிய முதலீடு திட்டம் இதுதான்.
இதில் முதலீடு செய்ய 60 வயதை கடந்திருக்க வேண்டும். முதலீடு மார்ச் 31ம் தேதி முதல் தொடங்குகிறது. மற்ற FD-ல் கிடைக்கும் வட்டியை விட இதில் 0.5% அதிக வட்டி கிடைக்கும். உதாரணமாக SBI-ன் சாதாரண FD முதலீட்டில் உங்களுக்கு 6.5% வட்டி கிடைக்கிறது எனில், இதில் 7% வட்டி கிடைக்கும். 1 வருடம் தொடங்கி 10 வருடம் வரை முதலீடு காலம் இருக்கிறது. எனவே விருப்பமான காலத்தை தேர்வு செய்துக்கொள்ளலாம்.
எப்படி இணைவது?:
அருகில் உள்ள SBI வங்கியின் கிளைக்கு சென்று SBI WeCare Deposit விண்ணப்ப படிவம் கேட்டால் கொடுப்பார்கள். அல்லது ஆன்லைன் வழியாகவே விண்ணப்பம் செய்யலாம். வயது சான்றுக்காக ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்டவை கேட்கப்படும். திட்டத்தில் இணைபவர்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கிடைக்கும். அதாவது 3 மாதங்களுக்கு ஒரு முறை வட்டி வேண்டும் என்றாலும் வங்கி அதை கொடுக்கும். இந்த திட்டத்தின் முதலீடுகளுக்கு ரூ.5 லட்சம் வரை உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
யாருக்கெல்லாம் பலன்?:
மேலே சொன்னதை போல, இது முழுக்க முழுக்க மூத்த குடிமக்களுக்கான திட்டம்தான். வெளிநாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள், உங்களின் பெற்றோருக்கு நிலையான வருமானத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் எனில், அவர்கள் பெயரில் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்தால் போதும். கிடைக்கும் வட்டி அவர்களுக்கு போதுமானதாக இருக்கும். இந்த முதலீடு பாதுகாப்பானது என்பதால் பணம் பற்றிய கவலை தேவையில்லாதது.
முதலீட்டு தொகை எவ்வளவு?:
நீங்கள் ரூ.1,000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். இவ்வளவு வரைதான் செய்ய முடியும் என்கிற உச்சவரம்பு கிடையாது. சாதாரண FD வட்டியை விட 0.50% + 0.30% கூடுதலாக வட்டி கிடைக்கும். அதிகபட்சமாக 7.50% வரை வட்டி கிடைக்கும்.
உதாரணத்திற்கு நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் எனில் ஆண்டுக்கு ரூ.7000 வட்டி கிடைக்கும். ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.70 ஆயிரம் கிடைக்கும். அப்படியெனில் மாதத்திற்கு தோராயமாக ரூ.5,800 கிடைக்கும். இந்த தொகை மூத்த குடிமக்களின் மருத்துவம் உள்ளிட்ட செலவுகளுக்கு போதுமானதுதான்.












Click it and Unblock the Notifications