சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிரட்டிய வெயிலை.. விரட்ட வர்றாரு வருணபகவான்... தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. கோடை மழை கொஞ்சுமும் பெய்யாததால், குடிக்கவே தண்ணீர் இன்றி மக்கள் பல இடங்களில் அல்லல்படுகிறார்கள்.

 Scattered rain and thunderstorms are possible over Tamil Nadu

சென்னை, வேலூர், காஞ்சிரபும், மதுரை, கோவை, என பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொழுத்தி வருகிறது. இதனால் எப்பபோது மழை விழும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் தவித்து வருகிறார்கள்.

அவர்களுக்காகவே ஒரு நல்ல செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று சொல்லி இருக்கிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா இந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா

சென்னை நகரைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக அதிகரித்து காணப்பட்ட வெப்பம் இன்று முதல் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியிஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகுமாம்.

வெயில் காரணமாக வீட்டுக்குள் முடங்கிய மக்கள், புழுக்கத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு அவர்களுக்கு சற்று ஆறுதலை தந்திருக்கும்.

English summary
Scattered rain and thunderstorms are possible over Tamil Nadu and The sky may cloudy coming days in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X