இன்னொரு வாக்குறுதிக்கு ‘டிக்’ அடித்த ஸ்டாலின்.. உதவித்தொகை உயர்வு! யாருக்கெல்லாம் பலன்? முழு விவரம்!
சென்னை: திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்த இன்னொரு வாக்குறுதியை டிக் அடித்துள்ளது. முதியோர் ஓய்வூதியம், கைம்பெண் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உதவித்தொகைகள் இனி மாதந்தோறும் ரூ.1,000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதி: திமுக தனது தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

தற்போது மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் நேரத்தில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித்தொகையை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். அதாவது, உதவித்தொகையை ரூ.1000ல் இருந்து 1200 ஆக உயர்த்தி வழங்க இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை உயர்வு: சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டம் முடிவடைந்ததும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக நல பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள் 1962ல் தான் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைக்கு மாதம் ரூ.20 வழங்கப்பட்டது. இப்போது வரை பல்வேறு காலகட்டங்களில் ஓய்வூதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, ரூ.1000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் முதல் அமல்: மாற்றத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் கடந்த ஜனவரி மாதம் முதல் ரூ.1000-லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் ஓய்வூதியம், கைம்பெண் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களில் 30 லட்சம் பயனாளிகள் பயன் பெற்று வருகிறார்கள்.
இந்த உதவித்தொகை ரூ.1000த்தில் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உயர்வு நடைமுறைப்படுத்தப்படும். உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுவதன் காரணமாக அரசின் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.841.91 கோடி கூடுதலாக செலவாகும். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்கக் கூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வுதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
யாரெல்லாம் பயன்பெறுவார்கள்?:
1. கைத்தறி துறை திட்டங்களில் பதிவு செய்து ஓய்வூதியம் பெறுபவர்கள்.
2. தொழிலாளர் நலத்துறையின் வாரியங்களில் உறுப்பினர்களாக இருந்து உதவித்தொகை பெறுபவர்கள்.
3. கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள்.
4. சமூக நலத்துறையின் மூலம் மாதந்தோறும் உதவித்தொகை பெறும் முதியோர், கைம்பெண்கள், 50 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு ஆகஸ்ட் மாதம் முதல் இனி ரூ.1200 உதவித்தொகை வழங்கப்படும்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக, 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்படவுள்ளன. திங்கட்கிழமையில் இருந்து கலைஞரின் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம்கள் நடத்தப்படும். மகளிர் உரிமைத்தொகைக்கு தகுதியான அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும். பயனாளிகள் எண்ணிக்கை குறைகிறது என்பது கணக்கில் கிடையாது. தகுதியான ஒருவர் கூட விடுபட மாட்டார்கள்." என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications