இன்னும் 2 நாள்தான் இருக்கு.. மாணவர்களுக்கு செம குட் நியூஸ்.. கொட்ட போகும் ஜாக்பாட்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வியை உயர்த்த பல்வேறு முக்கிய திட்டங்களை அரசு நடைமுறை படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஆகும் இது,
தமிழ்நாட்டில் கல்வியை வளப்படுத்த அரசு பல விதமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பஸ் பாஸ்
தொடங்கி இலவச சைக்கிள், லேப்டாப் வரை எல்லாமே மாணவ, மாணவியர் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மூலம் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ஆகும்.

அதன்படிதான் தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் உதவித்தொகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் மட்டுமின்றி கல்லூரிகளிலும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதாரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அங்கே 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கெல்லாம் எந்த விதமான நிபந்தனையும் கிடையாது. முதுகலை, தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்க நிபந்தனை உள்ளது. இங்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் 2,50,000க்கு அதிகமாக இருக்க கூடாது என்று மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடங்கியது: இந்த நிலையில்தான் இந்த வருடம் உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு புதிய மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். https://ssp. tn.gov.in என்ற இணையதள முகவரியில் புதிய மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஏற்கனவே இதில் பெயர் உள்ள மாணவர்கள் கூட லாகின் செய்து அதை புதுப்பிக்க வேண்டும்.
Student login சென்று அங்கே விவரங்களை அளிக்க வேண்டும். அதன்பின் ஆதார் எண் அளித்து e-KYC Verification கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அங்கே கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை கொடுக்க வேண்டும். அதேபோல் புதுப்பிக்க வேண்டும் என்றால் Student login சென்று அங்கே விவரங்களை அளிக்க வேண்டும். அதன்பின் ஆதார் எண் அளித்து e-KYC Verification கொடுத்து புதுப்பிக்க வேண்டும். இதற்கான ஸ்டேட்டஸ் உங்களுடைய போனுக்கு வரும்.
இல்லையென்றால் இந்த தளத்தில் சென்று உங்கள் விண்ணப்பம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகி உங்களுக்கு தேவையான குறைகளை இதில் நிவர்த்தி செய்யலாம்.அதாவது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதை பற்றி கேட்கலாம். இந்த பணிகளை செய்ய இன்னும் 2 நாட்கள் மட்டுமே நேரம் உள்ளது. இந்த மாதம் 18ம் தேதியோடு இதற்கான நேரம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது .












Click it and Unblock the Notifications