அடடா.. இனி மழைக்கு “லீவ்” கஷ்டம்! மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் இருந்து பறந்த ஆர்டர்!
சென்னை: இனிமேல் அதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், அதுவும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் தென்கிழக்கு மற்றும் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், இந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருவதாலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

மழை நிலவரத்தைப் பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த மாவட்டங்களில் மழையின் தாக்கம் பெரிதாக இல்லாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளைப் பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில், காலையில் தொடர்ச்சியாக மழை பெய்யும்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதிகாலையிலேயே அறிவிக்காமல், 8 மணிக்கு மேல் அறிவிப்பதால், பள்ளி மாணவர்கள் பரபரப்புடன் கிளம்பி பள்ளிக்கு சென்று திரும்பும் நிலை ஏற்படுவதை தவிர்க்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தேவையில்லாமல் விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை காரணமாக விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்த வேண்டும். விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள நிபந்தனைகள் காரணமாக இனி அவ்வளவு எளிதில் விடுமுறை கிடைக்காது எனக் கூறப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications