சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

6,7,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பதில் இதுதான்

இன்றைய சூழ்நிலையில் 6,7,8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இப்போது உள்ள சூழ்நிலையில் 6,7,8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் லெட் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்து மாதங்களாக மூடப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டின் பெரும்பகுதி ஆன்லைன் வகுப்புகளிலேயே கழிந்துவிட்டது. பொதுத்தேர்வு எழுதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதால் மாணவர்களுக்கு பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

 School re open for 6 7th and 8th class not now say TN minister Sengottaiyan

கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருவதால் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. விடுதிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

9 , 11ஆம் வகுப்புகளில் மாணக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் பாடப்பிரிவுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படுத்தலாம் எனவும், காலை - மாலை என இரண்டு ஷிப்ட் முறையில் நடத்தலாம் எனவும் கல்வித்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

"செம கடுப்பு".. யார் இந்த தட்சிணாமூர்த்தி.. ஒரே நாளில் ஃபேமஸ் ஆகி.. பரபரப்பை கிளப்பிட்டாரே..!

தமிழகம் தவிர பிற மாநிலங்களில் ஆறாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை என்றாலும் தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 6,7,8ஆம் வகுப்பு மாணக்கர்களுக்கு நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று கூறினார். இன்றைய சூழ்நிலையில் 6,7,8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை.

தற்போது 98.5 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகிறார்கள். 10,12ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும்.

ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அதற்கான அட்டவணை வெளியிடப்படும். நீட் தேர்வு இருமுறை நடத்துவது குறித்து மத்திய அரசு கடிதங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு எவ்வாறு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

English summary
In the current situation in Tamil Nadu, there is no possibility of opening schools for 6th, 7th and 8th classes, said the Minister of School Education, Sengottaiyan. He also said that the tablet will be given to students of 6th to 8th class.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X