தள்ளி போகிறதா பள்ளிகள் திறப்பு.. அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை
சென்னை: கோடை காலம் நிறைவடைய போகிறது. தமிழ்நாட்டில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளி திறப்புக்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களை தொடர்ந்து மே மாதத்திலும் வெயில் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. வெயில் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வெயில் கொளுத்துகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

வாட்டி வதைக்கும் வெயில்
அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வருகிற மே 28 ஆம் தேதி தான் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. அதன்பிறகும் வெயில் குறைந்து இயல்பு நிலை திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதுமே அடுத்த 10 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளில் பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களும் பள்ளி திறப்புக்கு தயாராகி வருகிறார்கள். சீருடை, புத்தகங்கள் விநியோகம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தள்ளி போகிறதா பள்ளிகள் திறப்பு
ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புகள், மஜக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, பெற்றோர் ஆகியோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
அதேபோல இந்த வருடமும் பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் பள்ளிகள் திறப்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
-
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications