பிளாக்ஹோல்: இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஆய்வு செய்ய உள்ள கருந்துளை இதுதான்! விஞ்ஞானிகள் விளக்கம்
சென்னை: கருந்துளைகள் குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோ இன்று விண்வெளிக்கு செயற்கைக்கோளை அனுப்பியிருக்கிறது. கருந்துளைகள் என்றால் என்ன? அறிவியல் உலகை தாண்டி சாதாரண மக்களிடத்திலும் இது குறித்து பிரபலமாக பேசப்படுவது ஏன்? எந்தெந்த கருந்துளைகளை இஸ்ரோ ஆய்வு செய்கிறது? என்கிற கேள்விக்கு விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி- 58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் எனும் செயற்கைக்கோளை விண்ணில் இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியுள்ளது. இது கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான 'நெபுலாவை' ஆய்வு செய்யும். உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து, கருந்துளை குறித்த ஆய்வில் இறங்கிய இரண்டாவது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

கருந்துளைகள் என்றால் என்ன?: முதல் விஷயம் கருந்துளையை நம்மால் பார்க்க முடியாது என்பதுதான். பார்த்தால்தானே அது என்ன? அதில் இருக்கும் பொருட்கள் என்னென்ன? அது எப்படி செயல்படுகிறது? அதற்குள் என்ன இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்க முடியும். எனவே, தற்போது வரை கருந்துளை விஷயத்தில் பாதிதான் நமக்கு தெரிந்திருக்கிறது. இந்த தெரிந்த தகவல்களின்படி கருந்துளையில், எந்த பொருள் போனாலும் அது வெளியில் வராது.
வகைகள்: இந்த பிரபஞ்சத்திலேயே ரொம்ப லேசான, அதே சமயம் வேகமான பொருள் ஒளிதான். ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. ஆனால் அதுகூட இந்த கருந்துளையிலிருந்து தப்பிக்க முடியாது. இவ்வளவு பலம் வாய்ந்த கருந்துளைகள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டெல்லார் (Stellar), இடைநிலை கருந்துளை (Intermediate), சூப்பர்மாசிவ் (Supermassive), மினியேச்சர் (Miniature) என்பதுதான் அது.
இடைநிலை கருந்துளை: இதில் 'ஸ்டெல்லார்' என்பது மிகவும் பொதுவானதாகும். சூரியனைவிட 8-10 மடங்கு நிறை கொண்ட நட்சத்திரங்கள் தங்களது வாழ்நாளின் முடிவில் கருந்துளையாக மாறுகின்றன. இரண்டாவது, 'இடைநிலை' கருந்துளை. இது சூரியனை விட 100 முதல் 1 லட்சம் மடங்கு வரை வரை நிறை கொண்டிருக்கும். இப்படி ஒரு பிரமாண்டமான கருந்துளை இருப்பதாக இதுவரை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கருத்தியல் ரீதியாக இப்படி ஒன்று இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சூப்பர் மாசிவ்: மூன்றாவது வகை, சூப்பர் மாசிவ் கருந்துளை. இதுதான் இருப்பதிலேயே மிக மிகப் பெரியது. நமது சூரியனை விட பல கோடி மடங்கு நிறை கொண்ட இந்த கருந்துளைகள், ஒவ்வொரு விண்மீன் மண்டலத்தின் மையத்திலும் காணப்படுகிறது. நமது பால்வெளி அண்டத்தின் நடுவிலும் இது இருக்கிறது. கடைசியாக மினியேச்சர் வகை கருந்துளைகள். மைக்ரோ பிளாக் ஹோல்ஸ் அல்லது குவாண்டம் மெக்கானிக்கல் பிளாக் ஹோல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது நட்சத்திரத்தை விட அளவில் குறைவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆய்வு: எப்படி இருப்பினும், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்மாசிவ் என இரண்டு கருந்துளைகள்தான் இப்போது வரைக்கும் விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கிறார்கள். எனவே இதன் மீதான ஆய்வு தொடர்ந்து வருகிறது. இந்த கருந்துளைகளிலிருந்து எக்ஸ் கதிர்கள், ரேடியோ கதிர்கள் போன்றவை வெளியே வரும். இது மின்காந்த அலைகள் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் இல்லாமல் தாறுமாறாக இருந்தால் முனைவாக்கமற்ற அலைவரிசை என்று அழைக்கப்படுகிறது.
இந்தியா: இதுவே சீரான அலைவரிசையில் இருந்தால் அது முனைவாக்க அலைவரிசை என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்த முனைவாக்கம் உள்ள அலைவரிசையை ஆராய்வதற்குதான் இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. சுருக்கமாக சொல்வதெனில் இது ஒரு தொலைநோக்கியை போல செயல்படும். இதற்கு முன்னர் அமெரிக்கா மட்டும்தான் இதனை செய்தது. அந்த வகையில் உலக அளவில் கருந்துளை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் இரண்டாவது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications