ஒரே வாரத்தில் பூமியை நெருக்கமாக கடக்கும் 5 விண்கற்கள்! ஜஸ்ட் மிஸ்ஸானாலும் மொத்தமாக முடிஞ்சது
சென்னை: விண்கற்கள் பூமிக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த வாரம் பூமிக்கு நெருக்கமாக 5 விண்கற்கள் பறந்து செல்ல இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. இந்நிலையில் அடுத்த வாரத்தில் 5 விண்கற்கள் பூமிக்கு நெருக்கமாக பறந்து செல்ல இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 1 க்கு இடையில் இந்த நிகழ்வு நடக்க உள்ளதாக நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
விண்கல் 2020 RL: 2020 RL என பெயரிடப்பட்ட விண்கல், ஆகஸ்ட் 27ம் தேதி பூமிக்கு மிக அருகில் 46.8 லட்சம் கிமீ தொலைவில் வரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 110 அடி அளவு கொண்ட விண்கல், விமானத்தைப் விட பெரியது. இது மணிக்கு 29,600 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. இந்த வேகம் துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டை விட 1000 மடங்கு அதிகம். இந்த விண்கல் பூமியில் மோதினால், 1.3 ஜிகாடன்கள் TNT வெடிபொருள் வெடித்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
25 அணுகுண்டு வெடித்தால் எந்த அளவுக்கு வெப்பம் வெளியாகுமோ அதை இந்த விண்கல் வெளிப்படுத்தும். அதேபோல விண்கல் விழுந்த இடத்தில் 2 கிலோ மீட்டர் விட்டம் அளவுக்கும், 1 கிலோ மீட்டர் ஆழத்திற்கும் பள்ளம் உருவாகும். ரிக்டர் அளவில் 7 என நிலநடுக்கத்தையும் ஏற்படுத்தும்.
92 அடி, ஒரு விமானத்தின் சைஸ் கொண்ட 2021 RA10 எனும் விண்கல், ஆகஸ்ட் 28 அன்று, பூமிக்கு 26.1 லட்சம் கிமீ நெருக்கமாக செல்கிறது. அதேபோல 64-அடி விட்டம் கொண்ட 2012 SX49 எனும் விண்கல், ஆகஸ்ட் 29ம் தேதி, 42.9 லட்சம் கிமீ தொலைவில் பூமியை கடக்க இருக்கிறது.
ஆகஸ்ட் 30ம் தேதி, 210 அடி அளவு கொண்ட 2016 RJ20 எனும் விண்கல் பூமியை 69.9 லட்சம் கிமீ நெருக்கமாக கடந்து செல்கிறது. கடைசியாக 2021 JT எனும் விண்கல் இதே தேதியில் பூமியை 63.6 லட்சம் கி.மீ தூரத்தில் கடந்து செல்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications