‛யம்மாடியோவ்’.. 176 ஆண்டுகளில் இல்லாத வெயில்! வாரி சுருட்டிய ஜூன்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடந்த ஜூன் மாதத்தில் 174 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சர்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு (என்ஓஏஏ) தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கும் வெயில் மே முழுவதும் வாட்டி வதைக்க தொடங்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாதமே வெயில் வாட்ட தொடங்கிவிட்டது. சரியாக சொல்வதெனில் பிப்ரவரி இறுதியிலிருந்தே வெயில் கொளுத்தியது. தென்னிந்தியாவும் சரி, வட இந்தியாவும் சரி ஒட்டு மொத்த நாடே வெயிலால் கடுமையான அவஸ்தையை எதிர்கொண்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சுமார் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் வாட்டியது.

இது மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிய அளவில் பாதித்தது. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர் தொடங்கி, அன்றாட கூலி தொழில் செய்பவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். பலர் வெயிலால் ஏற்படும் அக்கி, அம்மை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டனர். இன்னும் ஒருபடி மேலே சென்று சிலர் வெயிலால் மயக்கமடைந்து உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரிந்தது.
இந்நிலையில், சர்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு (என்ஓஏஏ) அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடந்த ஜூன் மாதத்தில் 174 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.
ஜூன் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 20ம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 1.89 டிகிரி டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதாவது இது கடந்த 174 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையைவிட அதிகமாகும். இதே கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இது 0.23 டிகிரி ஃபாரன்ஹீட்டாக அதிகரித்திருந்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பெருங்கடல்களின் அளவானது உயர்ந்தது. அண்டார்டிகாவில் பனி பாறைகளின் அளவு குறைந்தது.
இது பல இடங்களில் வெள்ளம், எதிர்பாராத பருவநிலை மாற்றம், திடீர் மழை, திடீர் வெயில், சூறாவளி, புயல் என முன்கூட்டியே கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் ஏற்படும். இது மனித சமூகத்திற்கு மட்டுமல்லாது, பறவைகள், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications