விடாத வெப்பம்.. சென்னையில் கொளுத்திய வெயில்.. மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாமே! நாளை எப்படி இருக்கும்?
சென்னை: சென்னையில் இன்று வெயில் வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் நாளைய காலநிலை நிலவரம் எப்படி இருக்கும்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் கத்தரி வெயில் தொடங்கியது. இதனால் வழக்கத்தை விட பல மாவட்டங்களில் வெயில் அதிகரித்தது. சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தததால் வெப்பம் ஓரளவு குறைந்து இருந்தது.
இந்நிலையில் தான் கத்தரி வெயில் காலம் முடிந்தாலும் கூட சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெயிலின் அளவு குறையவில்லை. இன்றைய தினம் சென்னையின் பல இடங்களில் வெயில் அதிகரித்து மக்களை வதைத்தது.

அதன்படி சென்னையில் பல இடங்களில் வெயில் அதிகமாக இருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை நகரில் இன்று அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக வில்லிவாக்கத்தில் 40.9 டிகிரி செல்சியஸ், கிண்டியில் 40.5 டிகிரி செல்சியஸ், மாதவரத்தில் 40.2 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது.
சென்னை புறநகரை பொறுத்தமட்டில் வானகரத்தில் 40.8 டிகிரி செல்சியஸ், புழல், பொத்தேரியில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 40.6 டிகிரி செல்சியஸ், திரூரிர் மற்றும் வேலூரில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது'' என கூறப்பட்டுள்ளது.
இதுதவிர கோவையில் 35.4 டிகிரி செல்சியஸ், கடலூரில் 39 டிகிரி செல்சியஸ், தமர்புரியில் 36.7 டிகிரி செல்சியஸ் மதுரையில் 38.6 டிகிரி செல்சியஸ், நாகப்பட்டினத்தில் 38.9 டிகிரி செல்சியஸ், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 38.1 டிகிரி செல்சியஸ், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 34.2 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.7 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடியில் 34.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்ததாக சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளைய சென்னை வானிலை நிலவரம் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில், ‛‛நாளைய தினம் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா












Click it and Unblock the Notifications