கோலி மாரோ! மத்திய அமைச்சர் சொன்னார்.. RPF வீரர் செய்தார் - ரயில் பயணிகள் கொலை குறித்து எஸ்டிபிஐ பரபர
சென்னை: ஜெய்பூர் - மும்பை ரயில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஆர்.பி.எப் காவலர் சேத்தன் சிங்கை தண்டித்து இனவாத வெறுப்பைத் தடுக்க முன்மாதிரியாக இருக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணை தலைவர் பி.எம்.காம்ப்ளே வெளியிட்டு உள்ள அறிக்கையில், "ஜெய்பூர் - மும்பை ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தி நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான வெறுப்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

இத்தகைய வெறுப்பு, மதவெறி கொண்ட பாசிச சங்பரிவார் சித்தாந்தத்தால் பொதுவான பெரும்பான்மை சமூக மக்களின் மனதில் புகுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்குத் துணையாக மற்றும் அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்த ஆர்பிஎஃப் வீரரான சேத்தன் சிங், ரயிலில் இருந்த மூன்று முஸ்லிம் பயணிகளையும் அவரது மூத்த அதிகாரியையும் சுட்டுக் கொன்றுள்ளார்.
ஆளும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் மிகவும் வெறுக்கத்தக்க மற்றும் பொறுப்பற்ற நிலைப்பாடு மற்றும் அறிக்கைகளின் விளைவுதான் இதுபோன்ற சம்பவங்கள். சிஏஏ போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முஸ்லிம்களை சுட்டுக் கொல்லும் நேரடி அழைப்பான "தேஷ் கே கடாரோ கோ கோலி மாரோ சலோ கோ..." என்ற முழக்கத்தை, குற்றவாளியான சேத்தன் சிங் முழுமையாக உள்வாங்கியதாகத் தெரிகிறது.
ஆர்பிஎஃப் சேத்தன் சிங் தனது தானியங்கி துப்பாக்கியால் சப்-இன்ஸ்பெக்டர் டிகா ராம் மீனாவையும் பி5 கோச்சில் இருந்த மற்றொரு பயணியையும் சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் ஐந்து பெட்டிகள் தொலைவில் பேண்ட்ரி காரில் இருந்த மற்றொரு முஸ்லிம் பயணியை சுட்டுக் கொன்றார். மேலும் எஸ்6 கோச்சில் மேலும் ஒரு முஸ்லிம் பயணியைக் கொன்றார். இது பி5 பெட்டியிலிருந்து 8 வது பெட்டியாகும்.
முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பயணிகளைக் கொல்லும் அவரது நடவடிக்கைக்கு தனது உயர்அதிகாரியிடமிருந்து வரக்கூடிய எந்தவொரு எதிர்ப்பையும் தவிர்ப்பதற்காக முதலில் அவரது மூத்த அதிகாரி கொல்லப்பட்டதாக அவரின் நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.
பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சாமானியர்களின் மனங்களில் வெறுப்பு சித்தாந்தம் எந்த அளவு ஆழமாக மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இந்த துயர சம்பவம் ஒரு உதாரணமாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, குற்றவாளிகளை 'மனநிலை சரியில்லாதவர்' என்று முத்திரை குத்தும் தற்போதைய நடைமுறைக்குப் பதிலாக, குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனையை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
எஸ்டிபிஐ கட்சி நாட்டில் சீரழிந்து வரும் வகுப்புவாத சூழல் குறித்து மிகுந்த கவலையை வெளிப்படுத்துகிறது. நாட்டில் உள்ள அமைதியை விரும்பும் மதச்சார்பற்ற மனங்கள், சங்பரிவாரின் மிகக் கொடிய வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்புவதற்கு எதிராக விழித்துக்கொண்டு, சங்பரிவாரின் இனவாத வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை ஒழிக்கும் வலுவான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்." என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications