“ஏய் பயங்கரவாதி”.. முஸ்லிம் எம்பியை நாடாளுமன்றத்தில் திட்டிய பாஜக எம்பி! ஆக்ஷன் கோரும் எஸ்டிபிஐ
சென்னை: நாடாளுமன்றத்தில் முஸ்லிம் எம்பியை பயங்கரவாதி என்று பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "இந்திய பாராளுமன்றம் அதன் உறுப்பினர்கள் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக, உயர்ந்த கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றும் இடமாக இருந்து வருகிறது. ஆனால், எதிர்க்கும் எவரையும் மதிக்காத பாஜக, ஜனநாயகத்தின் பிரதான மையத்தை துர்நாற்றம் வீசும் தெருவாகச் சீரழித்துவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக, பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி, வகுப்புவாத அவதூறுகளை வீசி மிகவும் இழிவான சொற்களைக் கொண்டு வெறுப்புப் பேச்சு பேசிய சம்பவம் நாட்டின் ஜனநாயக மையத்தின் புனிதத்தை ஒரு புதிய தாழ்வு நிலைக்கு தள்ளியுள்ளது.
ஆளும் கட்சி எம்.பி.யின் இந்த வெறுப்பு வார்த்தைப் பிரயோகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் பி.எம்.காம்ப்ளே தெரிவித்தார். பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, டேனிஷ் அலி எம்பிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளால் இழிவு செய்தது தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக மட்டும் அல்ல, மாறாக அது நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல் ஆகும்.
பாராளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலியை பயங்கரவாதி என்று கூறியது மட்டுமின்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பாஜக எம்.பி. கேவலமாக பேசியுள்ளார். தவறாக நடந்து கொண்ட எம்.பி.க்கு எச்சரிக்கை மட்டும் கொடுத்து விட்டு சபாநாயகர் அந்த விவகாரத்தை கை கழுவிவிட்டார்.
இந்த இழிவான செயல் நடந்தேறும்போது பிதுரியின் பின்னால் இருந்து மூத்த பாஜக எம்பிக்கள் சிரிப்பது சம்பவத்தை மோசமாக்குகின்றன. ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகளை பேசும் இடமாக இப்போது பாராளுமன்றம் மாறிவிட்டது.
நாடாளுமன்ற பதிவுகளில் இருந்து இழிவான கருத்துகளை நீக்குவது, அல்லது பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்பது அல்லது குற்றவாளிகளுக்கு கட்சித் தலைவர் வழங்கிய காரணம் கோரும் நோட்டீஸ் ஆகியவை சேதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையே தவிர வேறில்லை.
இந்திய முஸ்லிம்களின் கண்ணியத்தை காயப்படுத்தியது மட்டுமின்றி, ஜனநாயகக் கொள்கைகளையும், பாராளுமன்ற கண்ணியத்தையும் அவமதித்த பாஜக எம்பி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான நடத்தைக்காக பாஜக எம்பி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்; இல்லையேல் நாடாளுமன்றம் இனி வரும் நாட்களில் தனது மரியாதையை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் காம்ப்ளே தெரிவித்தார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications