வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தம்... வனங்களை தனியார் வசமாக்கும்... எஸ்.டி.பி.ஐ. கடும் எதிர்ப்பு..!
சென்னை: வனங்களை தனியார் வசமாக்கும் வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த ஆவணத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த நடவடிக்கைக்கு பூவுலகின் நண்பர்கள் குழு, வேல்முருகன் உள்ளிட்டோர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்று நெல்லை முபாரக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஆவணம் வெளியீடு
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வனப்பாதுகாப்பு சட்டம் 1980ஐ திருத்துவதற்கான முன்மொழிவுகள் அடங்கிய ஆவணமொன்றை வெளியிட்டு, அது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க 15 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. மிகக் குறைந்த நாட்களே மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், அந்த முன்மொழிவு ஆவணம் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

சூறையாடும்
இந்த திருத்த ஆவணம் முழுக்க முழுக்க பாதுகாக்கப்பட்ட வனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் அம்சங்கள் கொண்டதாகவே உள்ளது. ஒன்றிய பாஜக ஆட்சியில் 2014 முதல் 2019 வரை தேசம் முழுவதும் வளர்ச்சி என்ற பெயரில் வனப்பகுதிகளில் 682 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் எல்லாம் வனங்களை அழித்து கனிம வளங்களை சூறையாடும் திட்டங்களாகும்.

தாரை வார்க்கலாம்
பாஜக அரசு அனுமதித்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற வேண்டுமானால் வனத்தில் வாழும் பழங்குடிகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். அதற்குத்தான் துரிதமாக வேலை செய்து வருகிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களின் கனிமவள கொள்ளைக்கு எதிராக நிற்கும் பழங்குடிகளை எளிதில் அப்புறப்படுத்த முடியும். இதன் மூலம் எளிதாக தனது ஆதரவு ஏகபோக நிறுவனங்களுக்கு காடுகளை தாரை வார்க்க முடியும்.

செயல்படுத்தலாம்
அதுமட்டுமின்றி தேச முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிப்பது குறித்த அம்சங்கள் இந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு மட்டுமல்லாது, மாநில அரசால் சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்ட சாகர்மாலா, நியூட்ரினோ போன்ற திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.

ஆபத்தானது
'இயற்கையை ஒருமுறை கெடுத்தால், அது பதிலுக்கு பலமுறை நம்மை கெடுத்துவிடும்' இது ஏங்கல்ஸின் கூற்று. இயற்கையை கெடுப்பதும், பழங்குடிகளை வனங்களிலிருந்து வெளியேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் பழங்குடிகள் தான் இயற்கையான வனங்களை நேசிப்பவர்களாகவும்; காப்பாற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை வனங்களிலிருந்து வெளியேற்றுவதும், காடுகளை தனியாருக்கு தாரை வார்க்க முனைவதும் மிக மிக ஆபத்தானது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications