சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தப்புங்க.. எப்ப பார்த்தாலும் வெறுப்பரசியல்.. ஆளுநருக்கு எதிராக களமிறங்கிய எஸ்டிபிஐ.. அதிரடி அறிவிப்பு

ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்தது எஸ்டிபிஐ கட்சி

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநர் ரவியின் செயல்பாடுகளை கண்டித்து, எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.. மேலும் பாஜக அரசின் நடவடிக்கைகளையும் அக்கட்சி கண்டித்துள்ளது.

சென்னையில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார் தமிழக ஆளுநர் ரவி.. சமீபத்தில் நடத்திய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் குறித்து அவதூறாக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது

இறுக்கமான முடிச்சு.. நீட் மசோதாவை ஆளுநர் ரவி டெல்லிக்கு அனுப்பியது ஏன் தெரியுமா?இறுக்கமான முடிச்சு.. நீட் மசோதாவை ஆளுநர் ரவி டெல்லிக்கு அனுப்பியது ஏன் தெரியுமா?

 பாஜக நடவடிக்கை

பாஜக நடவடிக்கை

தமிழக அரசு இயற்றிய 19 மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதும், பேரறிவாளன் வழக்கில் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.. ஆளுநரின் பேச்சானது முழுக்க முழுக்க வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை செய்து வரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் நடவடிக்கைகளை சார்ந்தே உள்ளது.. ஆளுநரின் தொடர் தமிழர் விரோத போக்கு நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசை மதிக்காத போக்கு மற்றும் ஜனநாயக அமைப்புகள் குறித்து அவதூறு போன்ற நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்.

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

இதை வெளிப்படுத்தும் விதமாக, வருகின்ற மே 28-ம் தேதி, ஜனநாயக சக்திகளை திரட்டி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியும் முற்றுகை போராட்டத்தை நடத்த போகிறோம்.. நடைமுறையிலுள்ள 29 தொழிலாளர்கள் சட்டங்களை ஒன்றிணைத்து, மத்திய அரசு இயற்றிய அவசர சட்டத்தினால், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வேலைநிறுத்தம் போனஸ், பணிக்கொடை போன்ற பல தொழிலாளர் நலன் சார்ந்த உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

 பூர்வகுடி மக்கள்

பூர்வகுடி மக்கள்

இதனால் நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.. முழுக்க முழுக்க தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான இந்த சட்டத் தொகுப்புக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது.. பல சதாப்தங்களாக சென்னையின் பூர்வக்குடி மக்களாக வாழ்ந்து வரும் மக்களின் குடியிருப்புகளை இடித்து தரைமட்டம் ஆக்குவது ஏற்புடையதன்று.. ஆர்.ஏ.புரம் மக்களை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தாலும் தமிழக அரசு மக்களின் பக்கம் நின்றிருக்கலாம்.

ஷவர்மா

ஷவர்மா

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரள மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்தார்.. இதையடுத்து, ஷவர்மா உணவகத்திற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும் என்ற நடவடிக்கை அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.. அந்த உணவை தடை செய்து விட்டால் தீர்வு ஏற்பட்டு விடாது.. ஏற்கனவே இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்கள் மற்றும் அவர்கள் சார்ந்த உணவுகள் மீதான வெறுப்பு அரசியல் சதி திட்டத்துடன் வைக்கப்படுகிறது.. அரசின் இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாமியர்களுக்கு மேலும் உந்து சக்தியை ஏற்படுத்தும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

 இனவெறி

இனவெறி

ஜீ-5 ஓடிடி தளத்தில் 13ம் தேதி வெளியாக இருக்கும் இனவெறியை தூண்டும் விதமாக காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் தமிழாக்கத்தை தமிழக அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இந்த திரைப்படம் தடை செய்துள்ள நிலையில் அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்திலும் இத்திரைப்படத்தின் மூலம் மக்களை வன்முறைக்கு தூண்டும் என்பதால் தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றார் நெல்லை முபாரக்.

English summary
SdpI Parties announce protest against tamilnadu governor ravi and slams bjp SdpI Parties announce protest against tamilnadu governor ravi and slams bjp ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்தது எஸ்டிபிஐ கட்சி
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X