நெல்லை கண்ணன் கைது.. எஸ்டிபிஐ கட்சி கண்டனம்.. எள்ளளவும் உள்நோக்கம் இல்லை என விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நெல்லை கண்ணன் கைது - வீடியோ

    சென்னை: நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    நெல்லையில் கடந்த 29ஆம் தேதி குடியேற்ற சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழறிஞர் நெல்லைக் கண்ணன், தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    SDPI party condemn Tamil Nadu government over arrest of Nellai Kannan

    அப்போது பேசிய நெல்லைகண்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை ஒருமையில் அழைத்ததோடு, மேலும் ஒரு மோசமான வார்த்தையை குறிப்பிட்டு பேசினார்.

    இதனால் தமிழக பாஜக தலைவர்கள் கொந்தளித்தனர். இந்த செய்தி தேசிய ஊடகங்களிலும் எதிரொலித்தது. நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று, மெரினா கடற்கரையில் பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் பெரம்பலூரில் ஒரு விடுதியில் தங்கியிருந்த நெல்லைகண்ணன் இன்று இரவு அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து எஸ்டிபிஐ கட்சி வெளியிட்ட அறிக்கையில், பாஜக அரசு குறித்த நெல்லைகண்ணன் கருத்தில் எள்ளளவும் உள்நோக்கம் என்பது கிடையாது. நெல்லை கண்ணனுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

    வன்முறையை தூண்டும் கொலைவெறி பேச்சுக்களை பேசுவதையே வாடிக்கையாக கொண்ட பாஜகவினர் அவரது உரையை தேச விரோதமாக சித்தரித்து அளித்த புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. இவ்வாறு எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+