ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப் பாருங்கள்! வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக வரிந்துக்கட்டும் SDPI!
சென்னை: எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை உத்தரவை நீக்கி, ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த விசாரணையின் போது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரும் மனு மீது தமிழக அரசின் சார்பில் கடுமையான எதிர்வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த விசாரணையின் போது ஸ்டெர்லைட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டெர்லைட்டை இயக்கலாமா வேண்டாமா என்பது குறித்து நடுநிலையான நிபுணர் குழுவை அமைத்து, அந்தக் குழு அளிக்கும் அறிக்கையை வைத்து உத்தரவுகளை பிறப்பிக்கலாம் எனக் கோரிக்கை விடுத்தார். வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக் கொண்டால் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறக்கலாமா வேண்டாமா என முடிவு செய்யலாம் என தெரிவித்திருந்தது.
ஏற்கனவே, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அளித்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில், நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் குழு ஆய்வு செய்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் கீழும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்படியாக பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்த அறிக்கைகள், ஸ்டெர்லைட்டால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அனைத்து தரப்பினரின் வாதங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் ஒரு நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்கிற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை திட்டமிட்ட நடவடிக்கையாகவே தெரிகிறது.
ஆகவே, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கைக்கு எதிராக மிக வலுவாக வாதங்களை முன்வைத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு, எந்த காரணம் கொண்டும் உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.''
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications