செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை.. சிக்கியது என்ன? அமலாக்கத்துறை விளக்கம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் கடந்த 3 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது கைப்பற்றட்டது என்ன என்பது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் போது உடல் நலம் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற அனுமதியுடன் சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி, உடல் நலம் தேறியதையடுத்து கடந்த... தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அவரது கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஒரு பக்கம் தொடர்ந்து நடக்கும் நிலையில், மறுபுறம் பல பரபர சம்பவங்கள் நடந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை திண்டுக்கல் வேடசந்தூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இவருக்கு சொந்தமான நிதி நிறுவனங்கள், புஷ்பத்தூரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என கூறப்பட்டது.
சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை முடிந்த மறுநாளே, அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அன்றைய தினம் மாலை சங்கர் இல்லம் மற்றும் நிதி நிறுவனம் ஆகியவற்றில் சோதனை நிறைவு பெற்றது. 24 மணி நேரத்திற்கு மேலாக தனலட்சுமி மார்பிள்ஸ் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற சோதனை நேற்று காலை முடிவுக்கு வந்தது.
பிற்பகலில் லக்கி டிரேடர்ஸ் உரிமையாளர் செந்திலுடன் விஎஸ்பி அறக்கட்டளை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சென்று சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக விடிய நடைபெற்ற சோதனை நேற்று நள்ளிரவு நிறைவு பெற்றது. இந்த நிலையில், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை அமலாக்கத்துறை பகிர்ந்துள்ளது. அமலாக்கத்துறை கூறியிருப்பதாவது:-
கடந்த 3 ஆம் தேதி செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ரூ.22 லட்சம் மதிப்புள்ள கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ரூ.16 லட்சம் மதிப்புள்ள கணக்கில் வராத பொருட்களும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications