பாஜகவுக்கு எத்தனை சீட்? “கட்சி பலத்துக்கு ஏற்பவே தொகுதி ஒதுக்கீடு” - ஜெயக்குமார் கொடுத்த ரிப்ளை!
சென்னை: பாஜக அதிமுகவிடம் 60 தொகுதிகள் கேட்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், "தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும். அந்தந்த கட்சியின் பலத்துக்கு ஏற்பவே சீட் ஒதுக்கீடு செய்யப்படும்." என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் திமுக தங்களது ஆட்சி தொடரும் என சூளுரைத்து வர, மறுபக்கம் விஜய்யின் தவெக, அதிமுக, பாஜக உள்ளிட்ட இதர கட்சிகள் திமுகவை வீழ்த்துவோம் என கூறி தேர்தல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தைக் தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்த மறுநாளே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில், பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ள 65 தொகுதிகளின் பட்டியலை அமித் ஷாவிடம் நயினார் நகேந்திரன் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் மயிலாப்பூர், தியாகராய நகர், விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகிய தொகுதிகள் பாஜகவிற்கு சாதகமான தொகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பட்டியலில் கோவை தெற்கு மற்றும் வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அதிமுகவிடம் அந்தப் பட்டியல் வழங்கப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக 54 தொகுதிகள் கேட்பதாக வெளியான தகவல் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று திங்கட்கிழமை முதல் டிசம்பர் 23 செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விருப்ப மனுக்கள் பெற்று தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, அதிமுக கூடணியில் பாஜக 60 தொகுதிகளைக் கேட்பதாக வெளியாகி வரும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், "தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும். இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. எல்லா கட்சியும் சீட் அதிகமாகத்தான் கேட்பார்கள். அந்தந்த கட்சியின் பலத்துக்கு ஏற்பவே சீட் ஒதுக்கீடு செய்யப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ராயபுரம் தொகுதியில்தான் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "NO Doubt.. 25 வருடம் வெற்றியைக் கொடுத்தது ராயபுரம் தொகுதி மக்கள்; களத்தில் ஒரு மாவீரனுக்கு... ஒரு விளையாட்டு வீரனுக்கு வெற்றி... தோல்வி பற்றி கவலையில்லை; எந்த ஊரும் கிடையாது ஒரே ஊர்தான் ராயபுரம். ராயபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்கவுள்ளேன்: ராயபுரம் தொகுதியை விட்டு விலகி செல்ல மாட்டேன்; அங்குதான் போட்டியிடுவேன்" எனத் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்











Click it and Unblock the Notifications