சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்குநேரியில் டிவிஸ்ட்.. சீட் கேட்கும் பாஜக.. ஷாக்கில் அதிமுக.. குஷியில் காங்.. குழப்பத்தில் திமுக

நாங்குநேரி இடைத்தேர்தலில் சீட்டுக்கு போட்டா போட்டி ஏற்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவது யார்?- வீடியோ

    சென்னை: நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வரப்போகிறது. இந்த இடைத் தேர்தலில் யார் போட்டியிடப் போவது என்ற குழப்பம் வந்துள்ளதாம். அதிலும் நாலாபுறம் இருந்தும் சீட்டுக்கு துண்டு போட்டு வருவதால் அரசியல் களம் செம உஷ்ணமாக உள்ளது !

    இதில் முந்திக் கொண்டது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரசின் மண் என்றே சொல்லப்படும் அளவுக்கு பெயர் வாங்கியதுதான் நாங்குநேரி. அதனால் இந்த தொகுதியை விட்டுவிடக்கூடாது என்பதில் அக்கட்சி தெளிவாக உள்ளது. எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதால், தங்களுக்கே தொகுதியை தரும்படி கேட்டு வருகிறதாம்.

    ஆனால் திமுக கூட்டணிக்கு தொகுதியை தர விரும்பவில்லை போல தெரிகிறது. ஏனென்றால் இவ்வளவு ஜெயித்தும், அதிமுக அரசை எதுவுமே செய்ய முடியவில்லை.

    துக்ளக் கார்ட்டூன் பாத்தீங்களா.. அதிமுகவினரை இப்படி இதுவரை யாருமே அவமதித்ததில்லை! துக்ளக் கார்ட்டூன் பாத்தீங்களா.. அதிமுகவினரை இப்படி இதுவரை யாருமே அவமதித்ததில்லை!

    பாஜக

    பாஜக

    அதனால் ஆட்சியைக் கவிழ்க்க சட்ட ரீதியாக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் எப்படியாவது பயன்படுத்தி கொள்ளவே முடிவு செய்துள்ளது. எனவே யாருக்கும் தொகுதியை தராமல், திமுகவே போட்டியிடுவது என்றும், அங்கு வெற்றி பெற்று சட்டசபையில் அதிமுக பலத்தை மேலும் குறைக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் பிளான் செய்கிறது.

    அதிமுக

    அதிமுக

    இந்நிலையில், காங்கிரசுக்கு திரும்பவும் நாங்குநேரியை தந்துவிட்டால், நாம் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவோமோ என்று பாஜக தரப்பு நினைக்கிறதாம். எம்பி தேர்தலில்தான் கோட்டை விட்டுவிட்டோம், இந்த தேர்தலிலாவது நாங்குநேரியை ஜெயித்து காட்டலாம், அப்படி ஜெயித்துவிட்டால், பாஜக சார்பில் ஒரு எம்எல்ஏ சட்டமன்றத்துக்குள் இப்போது நுழையலாம் என்பதால், தங்களுக்கு தொகுதியை ஒதுக்கும்படி பாஜக அதிமுகவை நெருக்குகிறதாம்.

    கூட்டணி

    கூட்டணி

    ஆனால் அதிமுகவோ, எதையும் காதில் வாங்குவதாக தெரியவில்லை. நாங்குநேரியில் தாங்களே நின்று களமிறங்கலாம் என்று முடிவெடுத்து விட்டது. ஏனெனில் இப்போதே ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதில் ஜஸ்ட் பாஸில்தான் உள்ளது. இன்னும் திமுக தரப்பு எத்தனை பேரை அதிமுகவிலிருந்து இழுத்து கொண்டு போய்விடுமோ என்பது உறுதியாக தெரியவில்லை. அதனால் ஒவ்வொரு சீட்டும் ஆட்சியை பாதுகாக்க உதவுவது, தக்க வைக்க உதவுவது என்பதால் அதிமுக அதை கூட்டணிக்கு விட்டுத்தர தயாராக இல்லை.

    அதிமுக

    அதிமுக

    அது மட்டுமில்லை... நாங்குநேரியில் அதிமுக சார்பாக போட்டியிட வேட்பாளரைகூட கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாம். அவர் வேறு யாருமில்லை.. அதிமுக பிரச்சார பேச்சாளரும், திரைப்பட இயக்குனருமான நாஞ்சில் அன்பழகன்தான். இதற்கு காரணமும் உண்டு.

    நாஞ்சில் அன்பழகன்

    நாஞ்சில் அன்பழகன்

    நாங்குநேரி பகுதியில் ஐயா வழி நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் கணிசமாக உள்ளனர். அதனால்தான் இதே சமுதாயத்தை சேர்ந்த நாஞ்சில் அன்பழகனை வேட்பாளராக்க அதிமுக திட்டம் போட்டு வருகிறது. இவர் ஏற்கனவே ஐயா வழி நாடார் சமுதாயத்தின் பெருமை குறித்து ஒரு சினிமா கூட எடுத்திருக்கிறார்.

    வாகை சந்திரசேகர்

    வாகை சந்திரசேகர்

    மேலும், திமுகவில் எப்படி வாகை சந்திரசேகர், நட்சத்திர பேச்சாளராகவும், வேளச்சேரி எம்எல்ஏவாகவும் இருக்கிறாரோ, அதேபோல அதிமுகவில் நாஞ்சில் அன்பழகனை கொண்டு வர அதிமுக முயல்வதாகவும் சொல்லப்படுகிறது. இருக்கிறது ஒரு காலி தொகுதிதான்.. அதற்கு நாலா பக்கமும் போட்டி விறுவிறுவென ஆரம்பமாகி உள்ளது!

    English summary
    AIADMK chance to contest in Naguneri Constitution By election. But there is a tough fight between to get the seat from Congress and BJP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X