விட மாட்டேங்குறாங்க.. உள்ளே இருந்துகிட்டு கலகம்! கூட்டணி பேச்சில் இழுபறி.. திமுகவுக்கு பெரிய தலைவலி!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியை இறுதி செய்து விட்டாலும் தொகுதி பங்கீட்டை இன்னும் முடிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடங்கி இரட்டை இலக்க தொகுதிகள் என கூட்டணி கட்சிகள் முரண்டு பிடித்து வருவதால் இறுதிக் கட்டத்தில் சிக்கலை சந்தித்துள்ளது. திமுக கூட்டணிக்கு கூடுதல் கட்சிகள் வந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சில கட்சிகள் ஏற்காத நிலையில் கூட்டணி எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் வேகமெடுத்து வருகின்றன. தேர்தல் ஆணையம் இன்று மாலை தேர்தல் அட்டவணையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தியுள்ளது.
திமுக கூட்டணி
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அமைந்திருந்த கூட்டணியை விட இந்த முறை திமுக கூட்டணியில் மநீம, தேமுதிக உள்ளிட்ட புதிய அரசியல் கட்சிளும் இணைந்துள்ளது. குறிப்பாக தேமுதிக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் திமுக கூட்டணிக்குள் வந்துள்ளன. இதனால் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஒவ்வொரு கட்சிக்கும் வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையிலும் சிக்கல் உருவாகியுள்ளது.
தொகுதி பங்கீடு
இந்த சூழலில், கடந்த தேர்தலை விட இந்த முறை கூட்டணி கட்சிகள் தங்களது கோரிக்கைகளை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமுக தலைமை கூட்டணி கட்சிகளிடம், "இந்த முறை புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த தேர்தலை விட சில தொகுதிகளை குறைத்து ஏற்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் சில முக்கிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சு
அதன்படி இந்திய தேசிய காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதில் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி இழுபறி
மேலும் காங்கிரஸ் கட்சி மட்டும் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் இருந்து பெற்றுள்ளது. ஆனால் இன்னும் சில முக்கிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தேர்தல்களாக திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கோரி வருகின்றன.
பேச்சுவார்த்தை இழுபறி
இந்த கோரிக்கையில் அவை தளர்ச்சி காட்டாததால் பேச்சுவார்த்தை இழுபறியாகி வருவதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைவாக முடிக்க திமுக தலைமை முயற்சி மேற்கொண்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொகுதிப் பங்கீட்டு குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 தமிழக தேர்தல்
ஒருபுறம் அனைத்து கூட்டணி கட்சிகளும் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை கோரிக்கையாக முன்வைத்து வரும் நிலையில், மறுபுறம் புதிய கட்சிகள் இணைந்ததால் தொகுதிகளை குறைத்து கொள்ள வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. இதனால் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Khushbu Sundar: தவெகவுக்கு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? குஷ்பு தடாலடி கேள்வி!












Click it and Unblock the Notifications