என்னங்க இது வெறும் 20 வச்சுட்டு என்ன பண்றது.. புலம்பும் அதிமுக புள்ளிகள்!
20 தொகுதிகளில் போட்டியிடுவதால் மூத்த தலைவர்கள் வருத்தத்தில் உள்ளனராம்
Recommended Video

சென்னை: வெறும் 20 சீட்டை வெச்சிக்கிட்டு என்னதான் பண்றது? என்று கொந்தளித்து போய் உள்ளனராம் அதிமுகவின் முக்கிய மற்றும் மூத்த புள்ளிகள்!
ஒருவழியாக திமுகவும், அதிமுகவும் கூட்டணி, தொகுதி பங்கீடு முடித்துவிட்டன. இதில் அதிமுகவில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும், பாஜவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ், புதிய நீதிக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தமாகா ஒன்று ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதெல்லாம் இப்படி இருக்க அதிமுகவிற்கு மீதம் 20 தொகுதிகளே கிடைக்கும் நிலை உள்ளது.

37 எம்பிக்கள்
இதனால் மூத்த தலைவர்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்களாம். போன தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் அதிமுகவில் 37 சிட்டிங் எம்பிக்கள் இப்போது இருக்கிறார்கள்.

20 மட்டுமா?
ஆனால் போட்டியிடுவதே 20 தொகுதிகள் என்றால் இவர்களில் எத்தனை பேருக்கு திரும்பவும் சீட் கிடைக்கும், இதில் வெற்றி பெற போவது எத்தனை பேராக இருக்கும் என்றே யோசிக்கிறார்களாம்.

எப்படி சரிகட்டும்?
கூட்டணிகளை இழுத்து பிடிக்க இருக்கும் சீட்டுகளையும், தொகுதிகளையும் கொடுத்துவிட்டால், இவ்வளவு காலம் கட்சியில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு எப்படி வந்து சேரும் என்பதும், ஒருவேளை அதிகம் எதிர்பார்த்து சீட் கிடைக்காமல் போய்விட்டால், அவர்களை அதிமுக எப்படி சரிக்கட்டும் என்றெல்லாம் தெரியவில்லையே என்கிறார்களாம்.

அடுத்த பிரச்சனை
இன்னும் தொகுதியே முழுசாக ஒதுக்கப்படாத நிலையில், வேட்பாளர்களே அறிமுகம் செய்யப்படாத நிலையில், இப்பவே அடுத்த பிரச்சனை துவங்கிவிட்டதே என்ற புலம்பலும் கூடவே எழுந்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications