Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினுடன் அரை மணி நேரமாக ஒன் டூ ஒன்னாக பேசும் வேணுகோபால்! செல்வப்பெருந்தகை, சோடங்கர் மிஸ்ஸிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை திமுக தொடங்கிய நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் 20 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையோ பேச்சுவார்த்தை குழுவினரோ பங்கேற்கவில்லை என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வெறும் 4 பேர் மட்டுமே உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, வேணுகோபால், சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் சிங் தியோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளன.

Stalin

இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு வேணுகோபால் செய்தியாளர்களை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராகுல் காந்தி சென்னைக்கு வர முடியாததால் வேணுகோபாலிடம் ஏதோ ஒரு தகவலை சொல்லி அனுப்பியதால்தான் இந்த பேச்சுவார்த்தையில் வேறு யாருமே இடம் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

மோதல் போக்கு

திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. தலைமைகளிடம் ஒற்றுமை இருந்தாலும் நிர்வாகிகளிடையே வார்த்தை போர் நாளுக்கு நாள் உக்கிரமாக இருந்தது.

இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக ஐவர் குழு கடந்த டிசம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழு அமைக்கப்பட்டு 75 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் திமுக இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்ற அதிருப்தி காங்கிரஸிடம் நிலவி வந்தது.

25 தொகுதிகள்

காங்கிரஸை பொருத்தமட்டில் கடந்த முறை 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை 30க்கு மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறது. அத்துடன் ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டையும் கேட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் இன்று முதல் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீட்டு குழுவின் தலைவராக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன், கே.என். நேரு, ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, ஆ. ராசா, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகிய முக்கிய நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.

கூடுதல் இடம் கேட்கும் காங்கிரஸ்

இந்த நிலையில் காங்கிரஸ் கூடுதல் இடம் கேட்கும் நிலையில் தற்போது தேமுதிகவும் திமுக கூட்டணிக்கு வந்துள்ளதால் அனைத்து கட்சிகளுமே தொகுதிகளில் ஒன்றை குறைத்துக் கொள்ளுங்கள் என இன்றைய தினம் ஐயூஎம்எல் கட்சி மூலம் திமுக தலைமை தெரிவித்ததாகவே அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது காங்கிரஸுக்கு எப்படி 30 தொகுதிகளுக்கு மேல் கொடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ராஜ்யசபா எம்பி பதவியை பொருத்தமட்டில் தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ள ப.சிதம்பரத்தின் பதவிக்காலம் 2028 ஆம் ஆண்டு முடியும் , அப்போது சீட் தருவதாக கூறுகிறது.

காங்கிரஸ் ஏற்கவில்லை

ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. தற்போது நடைபெறும் மாநிலங்களவை தேர்தலிலேயே காங்கிரஸுக்கு ஒரு சீட் ஒதுக்குமாறு கேட்டு வருகிறதாம். இதனால் திமுகவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த முறை தேமுதிகவுக்கும் ஒரு ராஜ்யசபா ஒதுக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் முதல்வருடன் வேணுகோபால் நடத்தும் பேச்சுவார்த்தையின் முடிவில் என்ன நடக்கும் என்பது தெரியவரும்.

கிரிஷ் சோடங்கர் முகம் வாட்டம்

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வந்திருந்தும் அவரை பேச்சுவார்த்தை அனுமதிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவரது முகம் மாலை முதலே வாட்டமாக இருந்ததாக தெரிகிறது. அது போல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஒரு கட்சியின் மாநில தலைவரும் இருப்பது வழக்கம். ஆனால் தற்போது செல்வப்பெருந்தகை இந்த கூட்டத்தில் இல்லை என்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் திமுக சார்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீட்டு குழுவினரும் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினரும் இடம் பெறவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+