35 சீட் கேட்கும் காங்கிரஸ்.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 2, 3 நாட்களில் நடக்கும்.. வெளியான தகவல்!
சென்னை: அடுத்த 2, 3 நாட்களில் திமுக உடன் அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி (Congress) திமுக (DMK) கூட்டணியில் கூடுதல் சீட் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி வரும் நிலையில் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ், ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த குரல்களை எழுப்பி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பலர், ஆட்சியில் பங்கு தரவேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த முறை கூடுதல் இடங்களை கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
காங்கிரஸ் இம்முறை கூடுதல் இடங்களை கேட்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்னும் திமுக முறையான குழு அமைக்கவில்லை. அதேசமயம், திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச காங்கிரஸ் ஒரு குழு அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சென்னையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "இன்னும் 2 நாட்களில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச உள்ளோம். அடுத்த 2, 3 நாட்களில் திமுகவுடன் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். இரு தரப்பினரும் நடத்தும் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். கூட்டணி குறித்து திமுக எம்.பி கனிமொழியுடன் தொலைபேசியில் பேசினேன்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய கிரிஷ் சோடங்கர், "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நன்கு வளர்ச்சி கண்டு வலுவாக உள்ளது. அதனால்தான் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகளும்கூட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன" எனத் தெரிவித்தார்.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டணி கட்சியினருடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த முறை 35 தொகுதிகளை கேட்டு வருவதாகவும், அதற்கு திமுக மறுப்பு தெரிவித்து, கடந்த முறையை விட கூடுதலாக 2 அல்லது 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் இரு கட்சிகள் இடையேயான குழுவினர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கியதும் மேலதிக விவரங்கள் தெரியவரும்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications