சென்னைக்கு உள்ளே களமிறக்கப்பட்ட.. கழுகு! அடுத்த 2 வருஷத்திற்கு ஆட்டம் வேற மாதிரி இருக்கும்.. பின்னணி
சென்னை: சென்னையில் மெட்ரோவின் 2வது சுரங்கம் தோண்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சுரங்கம் தோண்டும் இயந்திரமான கழுகு கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப்நிலையம் வரை சுரங்கும் அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த பணிகள் அடுத்த 2 வருடங்களுக்கு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-4-ல் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
எப்போது முடிவடையும்: "ஃபிளமிங்கோ" என பெயரிடப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் 01.09.2023 அன்றுசுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வழித்தடம்-4-ல் கலங்கரை விளக்கத்தில் இருந்து (downline) போட் கிளப் நிலையம் வரை சுரங்கப்பாதை அமைத்து வருகிறது. "கழுகு" என பெயரிடப்பட்ட அதன்இணையான சுரங்கம் தோண்டும் இயந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து (upline) திருமயிலை நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபர் 2026 இல் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு.ஆர்.ரங்கநாதன்(கட்டுமானம்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் AEON நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
மெட்ரோ பாலம்: இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாலம் இடிப்பு: இந்த கட்டுமானம் காரணமாக சென்னையில் பல்வேறு பாலங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மயிலாப்பூரில் பாலம் ஒன்று இடிக்கப்பட உள்ளது., சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) திருமயிலை எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ள கல்வெர்ட் பாலத்தை இடிக்க முடிவு செய்துள்ளனர்.
கட்டம்-2 திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கப்பாதை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதால் இந்த பாலம் இடிக்கப்பட உள்ளது. மந்தவெளி அல்லது கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து லஸ் சந்திப்புக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுப் பாதையில் செல்ல வேண்டியிருக்கும். இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு பதிலாக புதிய பாலம் அருகில் கட்டப்பட்டு அதன் மூலம் வாகன போக்குவரத்து மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications