"டபுள் ஷாக்".. எடப்பாடி இதை எதிர்பார்க்கலையே.. கையை பிசைந்து நிற்கும் பரிதாபம்.. ஓவர் நிசப்தம்..!!
எடப்பாடி பழனிசாமி 2 அறிக்கைகள் வெளிவந்த நிலையில் அமைதியாகவே இருக்கிறார்களாம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி "சைலண்ட் மோடுக்கு" சென்றுவிட்டாராம்.. இதற்கு காரணமாக 2 விஷயங்கள் சொல்லப்படுகின்றன..!!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, இவை இரண்டுமே தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிலும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மட்டும் கூடுதலாக விவாதங்களை சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டுள்ளது.. ஆனால், 2 அறிக்கைகள் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி வாயை திறந்து எந்தவித கருத்தையும் சொல்லாமல் உள்ளார்..

டபுள் ரிப்போர்ட்கள்
இதில், தூத்துக்குடி சம்பவத்தை பொறுத்தவரை, தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி சொல்லியிருந்த நிலையில், எடப்பாடி உள்ளிட்ட தவறு செய்தவர்கள் மீது தனி நீதிபதியை அமைத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுக்க துவங்கி விட்டார்கள். 2 அறிக்கைகளில் எடப்பாடிக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தி உள்ளது தூத்துக்குடி சம்பவ அறிக்கைதான்..

ரெட் சிக்னல்
பேரவையில் அறிக்கையை தாக்கல் செய்ய போவதாக முன்கூட்டியே தகவல் கசிந்ததால்தான், அன்றைய தினம் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை எடப்பாடி அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயம் தொடர்பாக மேலிடத்தை தொடர்பு கொண்டு பேசி, உதவியை நாடியதாகவும், ஆனால், இந்த விஷயத்திலும் தலைமை, எடப்பாடியை கைவிட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸுடன் சேர்ந்தால் மட்டுமே, ஆதரவு சிக்னல் கிடைக்கும் என்பதையும் திட்டவட்டமாக சொல்லி விட்டார்களாம்.

லீகல் டீம்
இதனால், அப்செட்டில் உள்ள எடப்பாடி, தன்னுடைய லீகல் டீமுடன் சட்டரீதியான விஷயங்களை ஆலோசித்து வருகிறாராம். அதேபோல, ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கையில், எடப்பாடிக்கு பெரிதாக சிக்கல் இல்லை என்றாலும், தன்னுடைய ஆதரவாளர் விஜயபாஸ்கர் வசமாக சிக்கி உள்ளதால், இதை பற்றி பேச முடியாமல், சசிகலாவையும் வறுத்தெடுக்க முடியாமல் கையை பிசைந்து வருகிறாராம்.. அதிலும், சசிகலா பெயர் பலமாகவே அடிபடுவதால், உற்சாகத்தில் இருந்தாலும் இதுபற்றி வெளிப்படையாக எதுவும் பேசமுடியாமல் இருக்கிறாராம் எடப்பாடி..

தில் + எடப்பாடி
ஓபிஎஸ், சசிகலாவை விமர்சனம் செய்தால் பதிலுக்கு அவர்கள் விஜயபாஸ்கரை இழுத்த வந்து விமர்சிப்பார்கள் என்பதால், கப்சிப் மோடுக்கு போய்விட்டாராம்.. ஒருவேளை விஜயபாஸ்கர் மட்டும் இந்த லிஸ்ட்டில் இல்லாமல் இருந்தால், இதையே ஊதி பெரிதாக்கி, கட்சிக்குள் இத்தனை காலமும் சேர்க்காததற்கு காரணத்தை நியாயப்படுத்த முனைந்திருப்பாராம்.. பாஜக மேலிடம் உட்பட அனைத்தையுமே துணிச்சலாக அணுகிவரும் எடப்பாடி பழனிசாமி, இந்த 2 விதமான ஆணைய அறிக்கைகள், தாக்கல் செய்த பிறகு வாயே திறக்காமல் உள்ளது வியப்பை தந்து வருகிறதாம்..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications