Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல ஹோட்டலின் பாத்ரூமில் ரகசிய கேமரா.. அலறியடித்து ஓடும் மக்கள்.. பொதுவெளியில் குறையும் பாதுகாப்பு

சென்னை ஹோட்டலின் பாத்ரூமுக்குள் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடியை அடுத்து, சென்னை கிண்டியில் பிரபல சங்கீதா ஹோட்டலின் பாத்ரூமிலும், ரகசிய கேமரா வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

Recommended Video

    அதிர்ச்சி சம்பவம்! பிரபல ஹோட்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா - செல்போனில் வீடியோ பதிவு செய்த ஒருவர் கைது!

    சமீப காலமாகவே ரகசிய கேமராக்கள் விவகாரம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.. மக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை போலீசார் வைத்துள்ளனர்.

    இந்த கேமராக்களை வைத்தபிறகுதான், எத்தனையோ குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிகிறது.. பல வழக்குகளுக்கு தடயங்களை அள்ளித்தரும் கருவியாக இந்த சிசிடிவி கேமராக்கள் உதவி கொண்டிருக்கின்றன.

     விஷமிகள்

    விஷமிகள்

    ஆனால், பொது இடங்களிலும் ரகசிய கேமராக்களை சில விஷமிகள் பொருத்திவிடும் அபாயம் தலைதூக்கி வருகிறது.. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் கடந்த 2019 ம் ஆண்டு உண்டியல் என்ற பணி நடந்தது.. நடந்தது. அப்போது பெண் ஊழியர்களுக்கான பாத்ரூமில் பேனா கேமரா மூலம் படம் பிடித்ததாக மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் மீது புகார் எழுந்தது...

     வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர்... ஆனால், பச்சையப்பன் ஜாமீனில் வெளியே வந்துவிட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை பேரையூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்னமும் நடந்து வருகிறது... இப்படி ஒரு சம்பவம் நடந்து கோர்ட், வரை விவகாரம் சென்றும், விஷமிகள் அடங்கியபாடில்லை.. கடந்த வாரம் விளாத்திகுளம் கோயில் பாத்ரூமில் ரகசிய கேமரா இருந்துள்ளதை பெண்கள் சிலர் பார்த்து அலறிஅடித்து ஓடிவந்துள்ளனர்.

     விளாத்திகுளம்

    விளாத்திகுளம்

    கடந்த 17-ம் தேதி பெளர்ணமி தினத்தன்று கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார்கள்.. அப்போது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக கோயில் வளாகத்திலுள்ள பெண்களுக்கான பாத்ரூமுக்குள் சென்றிருக்கிறார். அப்போது குளியலறையில் சம்பந்தமில்லாத கருப்பு கலர் வயர் இருப்பதைக்கண்டு, அது என்னவென்று எடுத்து பார்த்திருக்கிறார். அப்போதுதான் அது கேமரா என்றே தெரியவந்துள்ளது..

     புகழ்பெற்ற ஓட்டல்

    புகழ்பெற்ற ஓட்டல்

    பிறகு விளாத்திகுளம் போலீசாருக்கு விஷயம் தெரிந்து, கோயிலுக்குச் சென்று அங்குள்ள பாத்ரூமை சோதனை செய்துள்ளனர்.. மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 2 ரகசிய கேமராக்களைக் கண்டெடுத்தனர்... இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அடுத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. கிண்டி ரயில் நிலையம் அருகே ஒரு புகழ்பெற்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.. இதற்கு நிறைய கிளைகளும் உண்டு.. இந்த ஹோட்டலின் பாத்ரூமில் செல்போனை வைத்து வீடியோ பதிவு செய்ததாக திமுக பிரமுகர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளார்..

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவர், மதுரவாயல் தொகுதி திமுக மகளிரணி அமைப்பாளராக இருந்து வருகிறார்... இவர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளரை சந்திப்பதற்காக கிண்டி வந்துள்ளனர்... உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நேர்காணலில் கலந்துக்கொண்டு கிண்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ஹோட்டலுக்கு நேற்று மதியம் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார்.

    பாத்ரூம்

    பாத்ரூம்

    அங்குள்ள பாத்ரூமில் அட்டை பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட செல்போனில் கேமரா ஆன் செய்யப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.. அந்த செல்போனில் வீடியோ ஆன் ஆகி கொண்டிருந்ததாம்.. பிறகு அந்த செல்போனை பறிமுதல் செய்து கிண்டி போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

     பாதுகாப்பு குறைபாடு?

    பாதுகாப்பு குறைபாடு?

    நாளுக்கு நாள் கோயில்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கு கூட மக்கள் கலக்கமடைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.. இதெல்லாம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக நடப்பதா? அல்லது காவல்துறையின் கவனக்குறைவா என்று தெரியவில்லை.. அதேபோல, தனியார் நிறுவனங்கள், தனியார் ஹோட்டல்களிலும் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளனா என்ற அதிரடி சோதனையையும் போலீசார் மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று பெண்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+