"பச்சை துரோகி".. சசிகலா மேஜர் முடிவு.. நொறுங்கும் சீக்ரெட்.. மவுனம் கலைக்கிறார்.. மாட்டபோகும் "தலை"

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சசிகலா முக்கிய பேட்டி ஒன்றை தரப்போகிறாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்துள்ள ஆறுமுகசாமி ஆணையத்தால் தமிழக அரசியலில் நேற்று முதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு விஷயம் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கினாலும், இழுபறியாக விசாரணை நீடித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்குள் அதிமுக ஆட்சியும் முடிந்துவிட, திமுக அரியணை ஏறியது..

முரண்கள்

முரண்கள்

இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை, ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

 பலிகடா

பலிகடா

இதையடுத்து, சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும்ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையானது அரசியல் களத்தில் கிளப்பி விட்டு வருகிறது.. அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ், உட்படஎடப்பாடி பழனிசாமி என யார் பெயரும் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லையே ஏன்? என்றும், அதிகாரம் இல்லாதவர்களின் பெயர்கள் அதில் இணைக்கப்பட்டு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்..

அபாண்டம்

அபாண்டம்

இப்படி ஒரு அறிக்கை வெளியானதுமே, சசிகலா ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார்.. அதில், ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் நான் தலையிடவில்லை.. என்மீது பழி போடுவது அபாண்டம்.. இப்படி ஒரு பொய்யான அபத்தமான ஒருகருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன. அதன் உள்நோக்கம் என்ன. ஆணையத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதுபோல ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு நான் மருத்துவப்படிப்பு படித்தது கிடையாது என்றெல்லாம் விளக்கம் கூறியும் அது பெரிதாக எடுபடாமலேயே உள்ளது..

 PLAN 1

PLAN 1

இப்படிப்பட்ட சூழலில்தான் நமக்கு ஒரு தகவல் கிடைத்தது.. ஆறுமுகச்சாமி ஆணைய விசாரணை அறிக்கை தனது கைக்கு கிடைத்ததுமே, அதனை முழுமையாக படித்து பார்த்து அதிர்ந்து போன சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரனுக்குத்தான் முதலில் போனை போட்டு பேசியுள்ளார்.. அதற்கு பண்ருட்டியார், "அறிக்கையை நானும் பார்த்தேன். அதிமுக தொண்டர்களிடம் உங்கள் இமேஜை பலகீனப்படுத்துவதற்காகவே அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. கவலைப்பட ஒன்றுமில்லை. தைரியமாக இருங்கள்" என்று சமாதானம் சொன்னாராம்....

 PLAN 2

PLAN 2

எனினும், இன்னொரு விஷயம் நமக்கு கிடைத்துள்ளது.. சசிகலா தந்திருந்த விளக்கம் போதாது என்று அவரது குடும்பத்தினர் நினைக்கிறார்களாம்.. இன்னும் வலிமையான பதிலடி தர வேண்டும் என்றும் ஆலோசித்திருக்கிறார்கள். இதனையடுத்து, ஆணையத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரிகளையும் உன்னிப்பாக ஆராய்கிறது. அதிலிருந்து நிறைய பாயிண்ட்டுகளை சேகரித்துள்ளனராம். அதையொட்டி ஒரு நீண்ட ஒரு ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பதிலடி ரிப்போர்ட்டை வெளியிடப் போகிறாராம் சசிகலா.

 தகரும் சீக்ரெட்

தகரும் சீக்ரெட்

இதற்கிடையே, பத்திரிகையாளர்களை சந்தித்து விரிவாக பேசுவது குறித்தும் ஆலோசித்துள்ளார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நாளை அல்லது ஓரிரு நாளில் நடக்கும் என்கிறார்கள் சசி தரப்பினர். அப்போது பல அதிரடி தகவல்களை தெரிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.. அநேகமாக சசிகலா இந்த முறை மவுனத்தை கலைத்தால், பலரது துரோகங்கள் வெளிப்படும் என்றே நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+