தைலாபுரத்தில் நடந்ததை அப்படியே சொன்ன ஜிகே மணி.. ஏன் இவ்ளோ லேட்டு? மாம்பழம் யாருக்கு? பலே பாமக

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்டர் ராமதாஸ் பின்னால் கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள், பாமகவின் அனுதாபிகள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.. டாக்டர் ராமதாசை பாதுகாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த தேர்தல் டாக்டர் ராமதாசுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜிகே மணி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் டாக்டர் ராமதாஸின் பாமக, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெறவும் மாநில வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

PMK Thailapuram GK Mani

அதேசமயம் 10.5% உள்ஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற சமூக நீதி கோரிக்கைகளில் சமரசமின்றி மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வரவிருக்கும் தேர்தல்களில் பலமான கூட்டணியை உருவாக்கி தங்கள் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறவும் ராமதாஸ் தரப்பு முனைப்பு காட்டி வருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆனால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில், கூட்டணி தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கவில்லை.. அதிமுக பக்கம் வாய்ப்பில்லாத நிலையில், திமுக கூட்டணிக்கு முயற்சிப்பதாக தெரிகிறது.. முதல்வர் ஸ்டாலினிடமும் போனில் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன..

ஆனால், திமுக கூட்டணிக்குள், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வர வாய்ப்புள்ளதா என்று 2 நாட்களுக்கு முன்பு கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவனிடம் கேட்கப்பட்டது.. அதற்கு திருமா, திமுகதான் முடிவு செய்யும், கூட்டணி குறித்து 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் தாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்..


ஜிகே மணி தைலாபுரம்

இந்நிலையில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேசியிருக்கிறார்.. அவரது பேட்டி, தமிழக அரசியலின் கவனத்தையும் திருப்பி வருகிறது..

ஜிகே மணி பேசும்போது, "ஒரு தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் பலம். அந்த கட்சியை வழிநடத்தக் கூடிய தலைவருக்கான மிகப்பெரிய சக்தி, அதையும் தாண்டி கூட்டணி. அதற்கும் மேல் அந்த தொகுதியில் வேட்பாளர்களுக்குரிய முக்கியத்துவம். இதெல்லாம் சேர்ந்ததுதான் வெற்றி. அந்த அடிப்படையில் இதையெல்லாம் கூட்டி கழித்து நேர்காணல் நடத்தி டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு நல்ல முடிவு எடுப்போம்.

பாமக இன்று ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்தால் கூட டாக்டர் ராமதாஸ் பின்னால் கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள், பாமகவின் அனுதாபிகள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.. டாக்டர் ராமதாசை பாதுகாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த தேர்தல் டாக்டர் ராமதாசுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்..

பாமக யாருடன் கூட்டணி

கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க டாக்டர் ராமதாசுக்கு பொதுக்குழு அதிகாரம் தந்திருக்கிறது.. மேலும் 3 கட்ட நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு, நிர்வாக குழுவிடம் டாக்டர் ராமதாஸ் கருத்தும் கேட்டார். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களிடம் தனித்தனியாகவும் கருத்து கேட்டார். அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் நல்ல முடிவு எடுப்பார்.

நல்ல முடிவாக இருக்கணும் என்பதற்காகத்தான் காலதாமதமாகிறது..
வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் இடம் பெறுகிற கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கக் கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும். அதனால் அலசி ஆராய்ந்து, யோசனை செய்து கொண்டிருக்கிறார். இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்

மாம்பழம் யாருக்கு

கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை. எல்லா தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் வெற்றி கூட்டணி எது என்று கண்டறிய வேண்டும்.. யாருக்கு, மாம்பழம் சின்னம் யாருக்கு என்பதை மிக தெளிவாக விரைவில் உங்களிடம் டாக்டர் ராமதாஸ் சொல்வார்.

ராமதாஸுடன் அன்புமணி பிரிவு

டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட பிரிவுக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். என்னை கைக்கூலி என்கிறார்கள்.. டாக்டர் ராமதாசையும், அன்புமணியையும் பிரிப்பதற்கு எனது மனசாட்சி இடம் கொடுக்குமா?

அவர்களை ஒன்றிணைக்க 5 மாதமாக முயற்சி மேற்கொண்டும், அது நடக்கவில்லை.. அந்த வருத்தம் இன்று வரை இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக பேச வேண்டும் என்று நினைக்கிற முதல் ஆள் நான்தான்... அவர்கள் இணைய தடையாக இருக்க மாட்டேன். கைக்கூலி என்று சொல்வதை கனத்த இதயத்துடன் தாங்கிக் கொண்டு வாழ்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+