ஒரே "அடி"யில் 2 மாங்காய்.. அதிமுகவை மட்டுமல்ல.. தேமுதிகவையும் சேர்த்து காலி செய்யும் அதிரடி திட்டம்!
தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலக யார் காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது
சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது தொடர்பாக பல சமாச்சாரங்கள் அலசப்படுகின்றன... நேற்றில் இருந்து இது ஒரு விவாதமாகவே சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றது..!
தேமுதிகவை பொறுத்தவரை எதையும் மறைமுகமாக செய்யவில்லை.. பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைக்கவில்லை என்பது முதல் சுதீஷ் பேசிய பேச்சுக்கள் வரை எல்லாமே ஓபனாகவே நடந்தது.. இறுதியில் அதிருப்தி அடைந்தது.
அதற்கு காரணம், எதிர்பார்த்த சீட் கிடைக்கவில்லை, வாய் விட்டு கேட்டும் சீட் கிடைக்கவில்லை.. என்பது தேமுதிகவின் வாதம்... மேலும் பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் தேமுதிகவுக்கு சாதகமான தொகுதிகளும் அடங்கிவிட்டதாக தேமுதிக கருதியது.

2 காரணங்கள்
பல பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.இதையடுத்து, தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும்? அல்லது நிஜமாகவே தனித்து களம் காணுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. அதேசமயம், தேமுதிகவை மறைமுகமாக அதிமுக அணியிலிருந்து சிலர் வெளியேற்றியுள்ளதாகவே கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதற்கு 2 காரணங்கள் இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

கணக்கு
ஒரு காரணம், தேமுதிகவை வெளியேற்றி மறைமுகமாக அதிமுகவை பலவீனப்படுத்துவது.. அதாவது அதிமுகவுக்கு என்று தனித்தன்மை, தனி மெஜாரிட்டி, கிடைத்துவிடக்கூடாது என்பதுதான்.. கிட்டத்தட்ட மெஜாரிட்டி இல்லாத தொங்கு அரசாக அமைந்துவிட்டால், தங்களுக்கு லாபம் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள்.. அதனாலேயே அளவுக்கு அதிகமாக அதிமுக வளர்ந்து விடக்கூடாது என்பதிலும் கவனத்துடன் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன. எனவே, தேமுதிகவை கூட்டணியில் இருந்து விலக்கிவிட்டால், அதிமுகவின் பலம் குறையும் என்ற கணக்கு போடப்படுகிறது.

தேமுதிக
2வது காரணம், தேமுதிகவையும் சேர்த்து காலி செய்வது என்பது இன்னொரு ரகசிய திட்டம். என்று இருந்தாலும் தேமுதிக ஒரு சக்தியாகவே இருக்கிறது. அதற்கும் தனியாக பிளான் போட வேண்டியுள்ளது. இதனால் தேமுதிகவையும் மேலும் பலவீனப்படுத்துவது. அதாவது அதிமுக அணியிலும் இடம் இல்லாமல், திமுகவுடனும் சேர முடியாமல் வேறு ஏதாவது சப்பை அணியுடன்தான் தேமுதிக சேர்ந்தாக வேண்டும் அல்லது தனித்து போட்டியிட வேண்டும் என்பது.

நிலைமை
அதிமுக, பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டே லோக்சபா தேர்தலில் இந்தக் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 3 சதவீதத்திற்கும் கீழ்தான்.. இப்போது நிலைமே இன்னும் மோசம்.. இந்த தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகள் கிடைத்தாலே பெரிய விஷயம்தான். விஜயகாந்த்துக்கும் பிரச்சாரம் செய்ய முடியாது.. மக்களிடம் செல்வாக்கு இல்லை.. இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரையும் சுதீஷூம், விஜய பிரபாகரனும் பிரச்சாரங்களில் பேசி பேசியே கெடுத்து கொள்ளக்கூடும்.

சின்னம்
இதுபோக, தங்களுடைய கட்சி, சின்னம், போன்றவைகளின் அங்கீகாரத்தை பெற வேண்டிய கட்டாயமும் அக்கட்சிக்கு உள்ளது.. அதனால் கூட்டணியில் சேர்த்தாலும் சரி, தொகுதிகளை ஒதுக்கினாலும் சரி, எதிர்பார்த்த வெற்றியை தேமுதிகவால் பெற முடியாமல் போய்விடும்.. இதனால் கூட்டணியும் பாதிக்கும்.. அதனாலேயே தேமுதிக நிரந்தரமாக காலியாகி விடும் என்பது அவர்களை வெளியேற்றிய சக்தியின் மறைமுகத் திட்டம் என கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தேமுதிக இல்லாமல் அதிமுகவும் பலவீனமாகியிருக்கிறது... எனவே ஒரு சேர அதிமுக, தேமுதிக இரண்டையும் காலி செய்யும் திட்டமே இது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications