Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்துக்கு வந்த கூச்சம்! அந்த வானத்தை போல சின்ன கவுண்டர்! ஆர்.வி. உதயகுமார் சொன்ன சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்ன கவுண்டர் படத்தில் நடித்த போது கேப்டன் விஜயகாந்துக்கு கூச்சம் ஏற்பட்டதாக அதன் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் மறைந்த போது அனைவரது ஸ்டேட்டஸிலும் இருந்த பாடல் அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே என்பதுதான். இந்த பாடல் சின்ன கவுண்டர் எனும் படத்தில் இடம்பெற்றது.

Secret story revealed by Director R.V.Udhayakumar about chinna gounder

இந்த படம் குறித்து சன் நியூஸ் சேனலுக்கு இயக்குநர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சின்ன கவுண்டர் படத்திற்கு முன்பு விஜயகாந்த் ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அவருக்கு சின்ன கவுண்டர் போல் ஒரு படம் செட்டாகுமா என நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள்.

நானும் அவர்களுக்கு ஆகும் என கூறிவிட்டு ராவுத்தரை பார்க்க சென்றேன். பிறகு விஜயகாந்திடம் கதை சொன்னதும் அவர் ஆரம்பத்தில் ஒரு நம்பிக்கை இல்லாமல்தான் ஒப்புக் கொண்டார். அதாவது பொழுதுபோக்கு படமாக இருந்துவிட்டு போகட்டும் என்றுதான் நடித்தார். அந்த படத்தில் சுகன்யா தொப்புளில் பம்பரம் விடும் சீனை அவரிடம் விவரித்தேன்.

என்னாது பம்பரம் விடணுமா, எனக்கு தெரியாதே, சின்ன வயசுல விளையாண்டது என்றார். பொதுவாக விஜயகாந்த் கேரக்டருக்கு தேவையென்றால் இயக்குநர் சொன்னால் ஓகே என சொல்லி நடித்துவிடுவார். மேலும் எனது படங்களில் காமெடி என்பது படத்தின் காட்சிகளுடன் ஒன்றி போகும். அதனால் அவர் எதுவும் சொல்லவில்லை.

அது போல் மொய் விருந்து வைப்பது எல்லாம் கிராமங்களில் நடக்கும் நடைமுறைதான். அதையே நான் வித்தியாசமாக தாலி வைத்து படம் எடுத்தேன். விஜயகாந்துக்கு இந்த படத்தில் வெறும் வேஷ்டி, சட்டை, துண்டுதான். இதற்காக 5 வேட்டி, சட்டைகள் வாங்கி, அதை துவைத்து அயர்ன் செய்து ரெடியாக வைத்திருப்போம்.

எப்போது கசங்கியிருக்கிறதோ அப்போது உடனே வேறு வேட்டியை மாற்றிவிடுவோம். விஜயகாந்தின் தலைமுடி படியாமல் இருக்கும். இந்த கேரக்டருக்கு அப்படியிருக்கக் கூடாது. அதனால் ஜெல் தடவி பார்த்தோம். ஆனாலும் சில முடிகள் அவருக்கு ரஃப்பாக இருந்ததால் வெளியே வந்துவிடும். சரி விளக்கெண்ணெய் வைக்கலாம் என்றால் அது முகத்தில் வழியும்.

இதனால் ஒரு துணியை வைத்து அவருடைய முடியை கட்டிவிட்டு அதன் மேல் விக் வைத்தோம். அப்படியே நின்றுவிட்டது. இந்த படத்தில் சுகன்யாவுக்கும் மனோரமாவுக்கும் காமெடி சீன் இருக்கும். நான் மாமியாரா வந்தால், நான் மட்டும் உனக்கு மருமகளாக வாய்ச்சா, இப்படியெல்லாம் டயலாக் வரும். அப்போது விஜயகாந்தை சுகன்யா திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வருவார்.

அப்போது புதுமணத் தம்பதியை வரவேற்க மனோரமாவும் ஊர்க்காரர்களும் நின்றிருப்பார்கள், அப்போது ஆச்சியும் சுகன்யாவும் அவர்கள் பேசிக் கொண்டதை நினைத்து சிரிப்பார்கள். அப்போது விஜயகாந்தும் அழகாக சிரிப்பார். ஆச்சி, சுகன்யா ஆகியோருக்கிடையே நடந்த காமெடி சீன் நடந்த போது விஜயகாந்த் இல்லை.

அதனால் சார் நீங்கள் யதார்த்தமாக சிரிங்கள் என்றேன். அவரும் அழகாக சிரித்தார். பின்னர் அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே என்ற பாடலை கேட்டுவிட்டு எதற்காக இவ்வளவு பெரிய வரிகள், எனக்கு கூச்சமாக இருக்கிறது என்றார். ஆனால் நாங்கள் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தோம். பின்னர் அந்த பாடல் பயங்கர ஹிட்டடித்தது. அதிலும் இளையராஜா பாடிய விதம் அருமையாக இருந்தது. அந்த பாடல் வரிகள் விஜயகாந்தின் நிஜ குணத்திற்கு பொருந்தியது என ஆர்.வி. உதயகுமார் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+