அண்ணாதுரையின் சீக்ரெட்ஸ்! 10 ஆண்டுகளில் பவர்ஃபுல் பார்ட்டி ஆன திமுக!
சென்னை: 1949இல் அண்ணாதுரை திமுகவைத் தொடங்கியபோது அவருக்குத் துளியும் தேர்தல் அரசியலில் முன் அனுபவமே இல்லாமல் இருந்த நிலையிலும் அவர் மிகப்பெரிய காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, புதிய சகாப்தத்தைத் தமிழ்நாட்டில் படைத்தார்.
1967இல் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால், திமுகவின் செல்வாக்கு மட்டும் உயரவில்லை. அந்தக் கட்சி மறைமுகமாகத் தமிழக வாக்குப் பதிவுக்கான சதவீதத்தையும் உயர்த்தி இருந்தது. அப்படியா? இது என்ன புதிய செய்தியாக இருக்கிறது எனச் சிலர் யோசிக்கலாம்.

தேர்தலில் திமுக செய்த மாற்றம்:
ஆம்! அதான் உண்மையில் நடந்தது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் அரசியல் சக்தியாக 1957இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட தேர்தலில் பதிவான வாக்குச் சதவீதம் 49.3% ஆக இருந்தது. ஜனநாயகத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் வாக்குரிமை பலரும் சரியாகப் பயன்படுத்தாமல் இருந்தனர்.
நாடு முழுவதும்1952 முதல் பொதுத் தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயரைச் சேர்க்கத் தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டபோது, நாடு முழுவதும் உள்ள பெண்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்யவே தயக்கம் காட்டினர். அவர்களின் பெயருக்குப் பதிலாக தன் கணவரின் பெயரையே அடையாளமாகக் கூறினர். அதை மறுத்து பெயரை வெளிப்படையாகப் பதிவு செய்ய முன்வராத பெண்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மறுப்புத் தெரித்தது. அதனால் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் மக்கள் தொகைக்கும் இடையே பெரிய இடைவெளி காணப்பட்டது.
இந்திய அளவில் நடந்த பொதுத் தேர்தலில் நாடு முழுமைக்கும் உள்ள மக்களின் பிரதிநிதித்துவம் முறையாகப் பேணப்படவில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து வந்த 1957 தேர்தலில் இந்த நிலை கொஞ்சம் முன்னேற்றம் கண்டது.
சுதந்திர இந்தியாவில் உருவான கட்சி திமுக. ஆனால், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்திலேயே நாட்டை ஆண்ட கட்சி காங்கிரஸ். ஒரு காலத்தில் அமைச்சரவையில் பங்கேற்பதா வேண்டாமா? எனக் காங்கிரஸ் கட்சிக்குள் வாக்குவாதம் நடந்தது. காந்தி அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
ஆனால், சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டும் என விரும்பினர். இறுதியில் காந்தியின் கட்டளையை மீறி காங்கிரஸ் தனி நடைபோட்டது.
ஆக, சுதந்திர இந்தியாவில் தோன்றிய மிகப் பழமையான கட்சிகளில் திமுக இன்றைக்கு முக்கியமான கட்சி. முன்னோடியான மாநிலக் கட்சி.
வாக்குச் சதவீதம் உயர்வு:
காங்கிரஸ் கட்சி 1957இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் களம் கண்டபோது பெற்ற வாக்குச் சதவீதம் 12.8 தான். இது 1967இல் 40.6% ஆக இருந்தது. திமுக தேர்தல் பாதைக்குத் திரும்பிய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பதிவாக வாக்குச் சதவீதம் பல மடங்கு அப்படியே உயர்ந்தது. குறிப்பிட்டுச் சொன்னால் 1957இல் பதிவான வாக்குகள் 49.3%. இந்தத் தேர்தலில் திமுக பங்கேற்றது. 1967இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வாக்குப் பதிவின் சதவீதம் 76.6% ஆகப் பெருகியது.
இந்தப் புள்ளி விவரங்கள் மறைமுகமாக உணர்த்தும் செய்தி என்ன? காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாக்காளர்களின் வாக்குப் பதிவு என்பது குறைவாகவே இருந்துள்ளது. மாநிலக் கட்சிகளின் உருவாக்கம் என்பது மக்களை மிகுந்த ஈடுபாட்டுடன் தேர்தலில் பங்கேற்க ஊக்குவித்திருக்கிறது.
அப்படிப் பார்த்தால் திமுகவின் வருகை என்பது தமிழ்நாட்டில் வாக்குச் சதவீதத்தைக் கூட்டியுள்ளது. இது அதுவரை வாக்குரிமையைப் பயன்படுத்தாத புதிய தலைமுறையைத் தேர்தலில் பங்கேற்கச் செய்துள்ளது என்பதை உணர்த்துகிறது.
1952 தேர்தலில் பங்கேற்கும் அளவுக்கு பலம் வாய்ந்த சக்தியாக இல்லை. ஒரு அரசியல் கட்சியாக அதன் அமைப்பு விரிவாக்கம் பெற்றிருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக 1949இல் அண்ணாதுரை தனிக் கட்சியைத் தொடங்கிவிட்டாலும். அவருக்குத் தேர்தல் அரசியல் பற்றிய பெரிய அளவுக்கு அனுபவம் இல்லை. அதுவரை அவர் சமூக சீர்திருத்த இயக்கமாகச் செயல்பட்டு வந்த திராவிடர் கழகத்திலேயே இருந்து வந்தார். அவர் ஆட்சி அதிகாரம் பெற்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்தல் அனுபவத்தையும் பெறவில்லை.
ஆனால், பெரியார் ஈ.வெ.ராமசாமி தேர்தல் அரசியலில் அனுபவம் இருந்தது. அவர் தேர்தல் அரசியலைவிட்டு விலகி, சமூக சீர்திருத்தப் பாதைக்குச் சென்ற காலத்தில், சமூக சீர்திருத்த அமைப்பிலிருந்து பிரிந்து தேர்தல் அரசியல் பாதைக்குள் அடி எடுத்து வைத்தார் அண்ணாதுரை. அது அவருக்கு மட்டுமல்ல; திமுகவுக்குமே புதிரான புதிய பாதையாகவே ஆரம்பத்திலிருந்தது.
17 ஆண்டுகள் போராட்டம்:
அவருக்கு மட்டுமல்ல; அவரது தொண்டர்கள் யாருமே தேர்தல் அனுபவம் பெறாதவர்கள். ஆனால், நூற்றாண்டு பழமையான காங்கிரஸ் கட்சியை மிக வலிமையாக எதிர்த்தார்கள்.
1952இல் தேர்தலைப் புறக்கணித்த திமுக அடுத்த பத்தாண்டுகளில் 206 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் 50 கைப்பற்றி ஒரு வரலாற்றுத் திரும்பத்தை தமிழக அரசியலில் உண்டாக்கியது. 1949இல் மாநிலக் கட்சியாக உருவான திமுக ஆட்சியைப் பிடிக்க 17 ஆண்டுகள் பல வலிமையான போராட்டங்களைச் சந்தித்து பலம் கொண்ட காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது என்பது வரலாறு.
திமுக 50 தொகுதிகளைக் கைப்பற்றிய போது அதற்கு 27% வாக்குகள் இருந்தது. அடுத்து 1967இல் மாநிலத்தில் ஆளும் கட்சியாக மாறியது. இந்த வளர்ச்சி செங்குத்தான வளர்ச்சி. அதாவது இந்தியா முழுமைக்கும் ஆதிக்கம் மிக்க கட்சியாகச் செல்வாக்குச் செலுத்திய காங்கிரஸைத் தோல்வியைச் சந்திக்கச் செய்தது.
1967இல் ஒரு மாநிலக் கட்சியிடம் தன் அதிகாரத்தைப் பறிகொடுத்த காங்கிரஸ் 2021 வரை அந்த இடத்திற்கு மீண்டும் வரவே இல்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கி மிகப்பெரிய மக்கள் ஆதரவைப் பெற்றபோதும் கூட, அவரால் 'காமராஜ் ஆட்சியை அமைப்போம்' என்று முழக்கம் போடத்தான் முடிந்தது. ஆட்சியைக் கைப்பற்ற முடியவே இல்லை.












Click it and Unblock the Notifications