55+2+1.. 2532.. நம்பரை கேட்டதுமே வெலவெலக்கும் ஓபிஎஸ் டீம்..திருப்பியடிக்கும் "மைனஸ்"..எடப்பாடி கேம்
திமுகவுடன் எடப்பாடிக்கு ரகசிய உறவு இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள்
சென்னை: ஓபிஎஸ்ஸுக்கு, தற்போதைய சூழலில் ஏகப்பட்ட பிளஸ் பாயிண்ட்கள் தன்வசம் இருந்தாலும், சில மைனஸ் பாயிண்ட்கள்தான், அவருக்கு எதிரானதாக திரும்ப போகிறது என்கிறார்கள். என்னவா இருக்கும்?
Recommended Video

கோர்ட்டு உத்தரவுப்படி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியும், புதிதாக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளும் செல்லாததாகி விட்டன.
இந்த தீர்ப்பு வெளியாகிய நிலையில்தான், கூட்டுத்தலைமையோடு மறுபடியும் ஒன்று கூடுவோம், கட்சியை நடத்துவோம் என்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்தார்.

கறார்தன்மை
ஆனால், அந்த வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். இருவரும் இணைந்து செயல்பட இனி வாய்ப்பே இல்லை என்பதையும் திட்டவட்டமாகவும் சொல்லிவிட்டார்.. ஓபிஎஸ் தனக்கு, அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்... இந்த வழக்கு வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் முடிவை எடப்பாடி பழனிசாமி பெரிதும் நம்பி உள்ளார்.

பிளஸ் பாயிண்ட்டுகள்
ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு அப்படி இல்லை.. எத்தனையோ சாதகமான சூழல்கள் உள்ளன.. குறிப்பாக, நீதிமன்றத்தின் தற்போதையே உத்தரவையே சொல்லலாம்.. இந்த வழக்கு விசாரணைகள் நடக்கும்போதே, எடப்பாடியிடம் நீதிபதி கேட்ட 4 முக்கிய கேள்விகள்தான், அதிமுகவை ஓபிஎஸ் பக்கம் திருப்பிவிடக் அடித்தளமாக இருந்திருக்கிறது.. இதுஒருவகையில் தற்காலிக வெற்றி என்றபோதிலும், கூடுதல் சாதகங்கள் ஓபிஎஸ்ஸுக்கு நிறைய உள்ளன. அந்தவகையில், பாஜக + திமுக இரண்டுமே ஓபிஎஸ் பக்கம் நிற்பதாக தெரிகிறது.

திமுக + பாஜக
இதில், பாஜக ஓபனாகவே தன் ஆதரவை காட்டிக் கொண்டாலும், திமுக மறைமுகமான ஆதரவை, தேவையான சமயங்களில் கரெக்ட்டாக வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகிறது.. அன்று முதல் இன்றுவரை டெல்லி ஆதரவை ஓபிஎஸ் பெறுவதற்கு முக்கிய காரணமே, அந்த கட்சியை அவர் வலுவாக எதிர்க்காததுதான்.. அறிக்கைகள்கூட காட்டமாக வெளிவந்ததில்லை.. மேலிடம் சொன்ன உத்தரவை, இதுவரை ஓபிஎஸ் மீறியதாக வரலாறே கிடையாது.. அந்தவகையில், ஆதரவுக்கரம் எல்லா சூழலிலும் ஓபிஎஸ்ஸுக்கு நீட்டப்பட்டுதான் வருகிறது. போதாக்குறைக்கு, பாஜக தலைவர்களின் எந்த பேச்சையும் எடப்பாடி செவிசாய்க்காத நிலையில், தானாகவே, ஓபிஎஸ்ஸுக்கு சப்போர்ட் கூடுதலாகிவிடுகிறது.

ஓபிஆர் - பாயிண்ட்
அதேபோல திமுகவை எடுத்துக்கொண்டால், இந்த ஆட்சி அமைந்ததில் இருந்தே, இணக்கத்துடன் செல்கிறார் ஓபிஎஸ்.. கருணாநிதியை ஓபிஎஸ் புகழ்ந்தது, அவரது மகனை இவரது மகன் பாராட்டியது, என புகழ்ச்சிகள் தொடர்கின்றன.. அதனால்தான், அதிமுக அலுவலகத்தில் வன்முறை வெடிக்கும்போதுகூட, தமிழக அரசும், காவல்துறையும் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக இறங்கியதாக, எடப்பாடி தரப்பில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.. இன்னொரு பிளஸ் பாயிண்ட்டாக, தினகரனும், சசிகலாவும் உள்ளனர்.

சின்னம்மா
சசிகலா, தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று போர்கொடியை தூக்கிய அவரே, இப்போது அவர்களையும் அரவணைக்க தயாராவிட்டார்.. சின்னம்மா என்று செய்தியாளர்களிடம் சொல்லி மகிழும் அளவுக்கு ஓபிஎஸ், தெம்பாகிவிட்டதையும், தொண்டர்கள் கவனிக்காமல் இல்லை.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஓபிஎஸ்ஸின் அணுகுமுறை மிக முக்கிய காரணம்.. இயல்பிலேயே எல்லோரையும் அரவணைத்து செல்லும் மனோபாவம் கொண்டவர்... யாரையுமே, எந்த சூழலிலும் காட்டமாக விமர்சனம் செய்ய மாட்டார்.. ஆவேசமாக பேசி, வார்த்தையை விடமாட்டார்.. இது பக்குவப்பட்ட ஒரு தலைவனுக்கு உரிய ஆகச்சிறந்த பண்பாகவும் பார்க்கப்படுகிறது.

அவசர அவசரமாக..
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அவசரப்பட்டு தவறிழைத்த அத்தனை சட்டத்தின் ஓட்டைகளையும், ஓபிஎஸ் மிக சரியாக பயன்படுத்திக் கொண்டும், நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டும் வருவதும் கவனிக்கத்தக்கது.. இத்தனை பிளஸ் பாயிண்ட்களை ஓபிஎஸ் வைத்திருந்தாலும், இவரது தரப்பிலும் சில மைனஸ்கள் இருக்கத்தானே செய்யும்.. இதைதான், தேடி நோண்டி வெளியே எடுத்து வருகிறது எடப்பாடி தரப்பு..

காட்டங்கள்
நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஓபிஎஸ்ஸை சரமாரியாக விமர்சித்தார்.. அன்று தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், செய்தியாளர்களிடம் பேசும்போதும், இதே வேகம் தென்பட்டது.. பச்சை துரோகி என்பது உட்பட எத்தனையோ விஷயங்களை எடப்பாடி அடுக்கினார்.. நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போதுகூட, ஒருவித பதட்ட நிலையில் காணப்பட்டாலும், ஓபிஎஸ் மீதான கோபம் இப்போதைக்கு நீங்காது என்பது மட்டும் தெளிவாக வெளிப்பட்டது.

டெக்னிக் மேட்டர்
தன் தரப்பு ஆதரவாளர்களில் பலர், ஓபிஎஸ் பக்கம் தாவிவிட்டதாக, சோஷியல் மீடியாவில் திட்டமிட்டு செய்திகளை பரப்பி வருவது எடப்பாடிக்கு மேலும் கடுப்பை தந்துள்ளதாம்.. அதனாலேயே எடப்பாடி தரப்பில் வேறு ஒரு டெக்னிக்கை துவங்கி உள்ளனராம்.. ஓபிஎஸ்ஸை நம்பினால் நடுத்தெருவுக்கு வந்துவிடுவதுதான், அவரை நம்பி சென்றவர்கள் யாரும், அரசியலில் வளர்ச்சி பெற்றதில்லை என்ற கருத்துக்களை முன்னெடுத்து வருகிறார்களாம்.. இதற்கு கடந்த காலங்களில் நடந்த உதாரணங்களையும் சொல்லி வருகிறார்களாம்.

நிஜபலம்
அத்துடன், கடந்த மாதம், அவரது கூடாரத்திலேயே நடந்த நிகழ்வுகளை முன்வைத்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.. அதாவது, "பொதுக்குழுவில் அன்று முதல் இன்றுவரை எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் 2532 உறுப்பினர்களும் அப்படியே ஒரே பக்கம் உள்ளனர்.. யாரும் அதில் இருந்து தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை.. இதுதான் நிஜபலம்.. ஆனால், ஓபிஎஸ் அப்படி இல்லை.. 55 மாவட்ட செயலாளர்களை நியமித்தாரே, அவர்களின் கதி என்ன? ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பண்டியன் என 2 துணை செயலாளர்களை நியமித்தாரே, அவர்களின் பதவி என்னாகும்? போதாக்குறைக்கு வைத்திலிங்கத்தை இணை செயலாளராக்கி உள்ளார்..

சான்ஸ் + சாய்ஸ்
இவருக்காவது மாவட்ட அளவில் பொறுப்பு உள்ளது.. தப்பித்துக் கொள்வார்.. மற்றவர்கள் எல்லாம், ஓபிஎஸ்ஸை நம்பி, ஏமாந்து போய் உள்ளனர்.. 23ம் தேதிக்கு முன்னிருந்த நிலைமையே தொடரும் என்பதுதானே நீதிமன்றத்தின் உத்தரவு.. அப்படியானால் இவர்களின் பதவி எல்லாம் காலாவதியாகிவிடும் பட்சத்தில், இவர்களில் பெரும்பாலானோர், ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவே திரும்ப வாய்ப்புள்ளது.. அதாவது எடப்பாடி பக்கமே வரக்கூடும் என்றெல்லாம் பரப்பப்பட்டு வருகின்றனவாம்..

மைனஸ்
அத்துடன், தன் தரப்பில் இனியும் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்.. குறிப்பாக, சிவி சண்முகம், முனுசாமி போன்றோரின் அவசரத்தனத்தினால்தான் இந்த அளவுக்கு சிக்கலை சந்தித்துள்ளதால், சட்டவிஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே, வழக்கறிஞர்களுடன் தொடர் ஆலோசனையில் உள்ளாராம்.. ஆக, ஓபிஎஸ்ஸுக்கு எத்தனையோ சாதகமான விஷயங்கள் கையில் இருந்தாலும், மைனஸ் விஷயங்கள் அவரது அரசியலையே, பதம் பார்க்கக்கூடும் என்கிறார்கள்.. அடுத்து என்ன நடக்க போகிறதோ.. பார்ப்போம்..!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications