சென்னையில் ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு: காவல் ஆணையர் அதிரடி
சென்னை: சென்னையில் ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏப்ரல் 30ம் தேதி வரை 144 உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 (4) மற்றும் பிரிவு 20 (2) ஆகியவை கடந்த 24 -ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு புதன்கிழமை (1.4.2020) காலை 6 மணி வரை அமலில் இருந்தது. இதையடுத்து காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் 144 தடை உத்தரவை, மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இதன்படி ஏப்ரல் 15-ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக ஏப்ரல் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் மூலம், பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்டவா்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முன்னதாக, பேரிடா் மேலாண்மைச் சட்டம் 10 (2) (1) பிரிவின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் கரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த 25-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பேரிடா் மேலாண்மைச் சட்டம் 10 (2) (1) பிரிவின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த 25-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications