34C பிரிவால் மக்கள் ஷாக்! பவர் ஆஃப் அட்டர்னி, அசல் ஆவணம் இருந்தாலும் விருதாச்சலத்தில் பதிவு மறுப்பு?
சென்னை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.. பதிவு சட்டப்பிரிவு 34C காரணமாக அசல் ஆவணம் இல்லாமல் பகுதி மனைகளின் பதிவு மறுப்பு - பதிவு சட்டப்பிரிவு 55A அடிப்படையில் பொது அதிகார ஆவணத்தை அசல் ஆவணமாக ஏற்று பதிவு செய்ய உத்தரவு வழங்க வேண்டும் என்று கேட்டு, இதற்காகவே கடிதம் ஒன்றையும் விரிவாக எழுதியுள்ளார்.
டாக்டர் ஹென்றி எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு பதிவுத்துறை, கடலூர் பதிவு மண்டலத்திற்குட்பட்ட விருத்தாச்சலம் பதிவு மாவட்டம், விருத்தாச்சலம் ஒன்றாவது இணை சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட எருமனூர் கிராமத்தில் புல எண்கள் 393/6 இல் அமைந்துள்ள நிலத்தை அபிவிருத்தி செய்து பியரல் சிட்டி என்ற பெயரில் DTCP (122/2024) மனை பிரிவு அமைத்து 52 எண்ணிக்கையிலான மனை பிரிவு திரு.A.மணி என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முழு வீட்டுமனை பிரிவிலிருந்து 18எண்ணிக்கையிலான பகுதி மனைகளை மாத்திரம் திரு.M.அன்வர் பாஷா என்பவர் சட்டப்படி பொது அதிகார ஆவணம் (Power of Attorney) எழுதி பெற்றுள்ளார்.

விருதாச்சலம் பொது அதிகார ஆவணம்
அவரிடம் பொது அதிகார ஆவணத்தின் அசல் இருப்பினும், முந்தைய முதல்வர் திரு.A.மணி அவர்களின் பெயரில் உள்ள அசல் ஆவணம் அவரிடம் இல்லை. காரணம், முழுமையான அதிகாரம் பெறாமல் பகுதி மனைகளுக்கான அதிகாரம் மட்டுமே பெறப்பட்டுள்ளது. மூல அசல் ஆவணம் நில உரிமையாளரிடமே உள்ளது. அவர் தற்போது உடல்நிலை பாதிப்பில் உள்ளார்.
இந்நிலையில், விருத்தாச்சலம் ஒன்றாவது இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவிற்காக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள்,"முந்தைய உரிமையாளரின் அசல் ஆவணம் இருந்தால் மட்டுமே பதிவு செய்ய இயலும்"என்ற காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கான காரணமாக, இந்திய குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் ஜனவரி 2026 இல் இயற்றப்பட்டுள்ள பதிவு சட்டப்பிரிவு 34C மேற்கோள் காட்டி பதிவு மறுக்கப்படுகிறது. ஆனால், இதற்கு முன்பே பதிவு சட்டப்பிரிவு 55A-இன் கீழ்,பகுதி மனைகளுக்காக வழங்கப்பட்டுள்ள பொது அதிகார ஆவணத்தின் அசல் ஆவணம் இருந்தால் அதன் அடிப்படையில் பதிவு செய்யலாம் என தெளிவுரை வழங்கி, தங்களது பதிவுத்துறை சார்பில் 22482/C1/2022 Dt.02.02.2023 ஆக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அசல் ஆவணங்கள்
எனவே, நடைமுறையில் அமலில் உள்ள சட்டத் தெளிவுரையை பின்பற்றாமல் புதிய சட்டப்பிரிவை காரணம் காட்டி பதிவு மறுக்கப்படுவது சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் முரண்பாடாகும்.
இதன் விளைவாக, மனைகளை முன்பதிவு செய்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், வங்கிக் கடன் பெற்று நாள்-நட்சத்திரம் பார்த்து பெரியவர்களின் ஆசி பெற்று, உரிய ஆவணம் தயாரித்து பதிவுத்துறை இணையதளத்தில் முன்பதிவு செய்து, பதிவு செய்ய வந்தவர்கள், மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்ய முடியாமல் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
கடன் வழங்கிய வங்கிகள் உடனடியாக பதிவு செய்ய கோரி வாடிக்கையாளருக்கு அழுத்தம் கொடுக்கிறது, பொது அதிகாரம் பெற்ற நபர் வாடிக்கையாளர்களுக்கு பதில் ஏதும் சொல்ல இயலாமல் அவரின் வணிகமும் பாதிக்கப்பட்டு, சமூகத்தில் அவரின் நற்பெயரும் கெட்டு கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பவர் ஆஃப் அட்டர்னி
இந்த நிலை தொடருமானால், பதிவுத்துறையின் மீதும் அபிவிருத்தியாளர்களின் மீதும் பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படுவதோடு நில பரிவர்த்தனைகளும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
ஆகவே தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் ஆகிய தாங்கள் மேற்கண்ட மக்களின் நியாயமான பிரச்சனையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பதிவு சட்டப்பிரிவு 55A அடிப்படையில், பகுதி மனைகளுக்கான பொது அதிகார ஆவணத்தை அசல் ஆவணமாக ஏற்று பதிவு செய்ய உடனடியாக உத்தரவு வழங்க வேண்டும்..
மேலும், பதிவு சட்டப்பிரிவுகள் 34C மற்றும் 55A தொடர்பான நடைமுறை விளக்கத்தை அனைத்து பதிவகங்களுக்கும் தெளிவாக அறிவித்து, விருத்தாச்சலம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பி அனுப்பப்பட்ட ஆவணத்தை மறுபரிசீலனை செய்து உடனடி பதிவு செய்ய உத்தரவிட வேண்டும், இனி இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்த தெளிவுரை சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.
டாக்டர் ஹென்றி கடிதம்
மேலும் இது குறித்து பதிவுத்துறை தலைவர் அலுவலகத்திலும், கடலூர் மண்டல பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகத்திலும், விருத்தாச்சலம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் உரிய அலுவலர்களை நேரில் சந்தித்து முறையிட்டும் எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை.
ஆகவே தாங்கள் இப்படிப்பட்ட சூழலில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு காலத்தின் அருமை கருதி போர்க்கால அடிப்படையில் உரிய தீர்வினை ஏற்படுத்தித் தராமல், தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி இப்படிப்பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக தங்களை நேரில் சந்தித்து முறையிட தங்களின் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களை கூட சந்திக்காமல் தவிர்த்து வருவதும், தங்களின் பொறுப்பை உணராமல் தட்டி கழிப்பதும் மிகுந்த வேதனை அளிக்கிறது.
மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தாங்கள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு தீர்வு ஏற்படுத்துவதற்கு மேலும் காலம் தாமதிக்காமல் பொதுமக்கள் நலனையும் சட்ட நடைமுறையின் ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டு தாங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டாக்டர்.ஆ.ஹென்றி கோரிக்கை வைத்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications