விண்வெளியில் முளைத்த விதை.. இஸ்ரோ படைத்த வரலாற்று சாதனை!
சென்னை: இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விதை முளைத்திருக்கிறது. இதன் மூலம் இந்தியா விண்வெளி துறையில் புதிய மைல் கல்லை எட்டியிருக்கிறது. இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள இஸ்ரோ, வரும் நாட்களில் விதை செடியாக வளரும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி -சி60 ராக்கெட்டில் பல ஆய்வு பொருட்களை வைத்து அனுப்பியது நாசா. இதில் முக்கியமானதுதான் 'சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான காம்பாக்ட் ரிசர்ச் மாட்யூல்' (CROPS). இதில் சிறய வகை பயிர் விதைகளும் வைத்து அனுப்பப்பட்டிருந்தது. விண்வெளியில் பயிர்களை வளர்க்க முடியுமா? என்பதை கண்டுபிடிக்கவே இந்த ஆய்வு மாட்யூல் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் பல நாடுகள், விண்வெளியில் தாவரத்தை வளர வைத்து காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்தியா சொந்தமாக இதுபோன்ற சோதனையை செய்தது கிடையாது.

அந்த வகையில் CROPS தான் முதல் சோதனை. இஸ்ரோ அனுப்பி வைத்த மாட்யூலில், சிறிய பயிர்களின் விதை, அது முளைக்க தேவையான மண், ஹெர்மெட்டிலி சீல் செய்யப்பட்ட யூனிட், வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வாயு பரிமாற்றத்தை அளிவிட சென்சார்கள், பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்கு ஏற்ற ஹைட்ரோபோனிக் அமைப்புகள், விதைக்கு தேவையான நீர் மற்றும் ஊட்டச்சத்தை கொடுக்க தானியங்கி அமைப்பு, விதையின் வளர்ச்சியை கண்காணிக்க உயர்திறன் கொண்ட கேமரா, விதை செடியாக முளைத்தால் அதை அளவிட ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் ஆகியவை பொறுத்தப்பட்டிருந்தன.
இவ்வளவும் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்ட விதை தற்போது முளைத்திருக்கிறது. இதற்கான ஆதாரமாக புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது. இந்திய விண்வெளி வரலாற்றில், நாம் அனுப்பி வைத்த விதை ஒன்று விண்வெளியில் முளைத்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்த ஆய்வின் மூலம் ஈர்ப்பு விசையே இல்லாத பகுதிகளில் செடிகள் எப்படி வளர்கின்றன என்பதை அறிந்துக்கொள்ள முடியும். இப்படி வளரும் செடிகள், பூமியில் ஈர்ப்பு விசையில் வளரும் செடியுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது? என்றும், வேறுபட்டிருக்கிறது எனில்? என்னென்ன வேறுபட்டிருக்கிறது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளவும் இந்த ஆய்வு பயன்படும்.
எதிர்காலத்தில் மனித இனம் இன்னொரு கோளுக்கும், இன்னொரு சூரிய குடும்பத்தை நோக்கியும் போக வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்படியிருக்கும்போது நமக்கு தேவையான உணவை நாமே தயாரிக்க வேண்டியது வரும். மட்டுமல்லாது புதிய கிரகத்தில் நாம் சாப்பிடும் வகையான உணவுகள் இல்லாமல் இருக்கலாம். எனவே பூமியிலிருந்து பயிர்களை உயிருடன் அங்கு கொண்டு செல்ல திட்டமிடல் அவசியம். இது குறித்த அறிவு நமக்கு இருந்தால்தான் மற்ற கிரகங்களில், பூமியில் விளையும் பயிர்களை வளர்க்க முடியும். இதற்கான அறிவை பெறும் பணியில்தான் இஸ்ரோ தற்போது ஈடுபட்டிருக்கிறது.
அதேபோல அதிக கதிர்வீச்சு, அதிக அழுத்தம், குறைந்த நீர் உள்ள பகுதிகளில் செடிகள் எப்படி வளர்கின்ற என்பது குறித்தும் இந்த ஆய்வின் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications