சீமானை பார்த்தவுடன் திருமாவுக்கு வந்துச்சே சிரிப்பு.. எதிர்பாராத சந்திப்பு! வன்னியரசுவின் வீடியோ
சென்னை: மாலை முரசு நிறுவனர் இராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்த சென்றபோது திருமாவளவனும் சீமானும் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
Recommended Video
மறைந்த மூத்த பத்திரிகையாளரும் மாலை முரசு நாளிதழின் அதிபருமான ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனை ஒட்டி சென்னையில் அவரது உருவ படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் இராமச்சந்திர ஆதித்தனார் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவர்களுடன் சினிமா பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவருமான சினேகனும் ஆதித்தனார் படத்துக்கு மரியாதை செலுத்திக் கொண்டு இருந்தார். அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் ராமச்சந்திர ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்த வந்தார்.
அப்போது ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர். திருமாவளவன், சீமான், வன்னியரசு, சினேகன் ஆகியோர் சிரித்து பேசிக்கொண்டனர். அரசியலில் வெவ்வேறு கூட்டணியில் இருந்தாலும் ஈழ விவகாரம், தமிழர் நலன் போன்றவற்றில் இரு கட்சிகளும் வலுவாக குரல் கொடுத்து வரும் நிலையில், இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்ட வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் வன்னியரசு, "மாலைமுரசு அதிபர் அய்யா ராமச்சந்திர ஆதித்தனாருக்கு இன்று எழுச்சித்தமிழர் திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் அஞ்சலி செலுத்தினோம். அண்ணன் சீமான் அவர்கள் வருகை தந்த போது வரவேற்றோம்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications