மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அசராமல் நாதக வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

தாராபுரத்தில் கார்த்திகாவும், மதுராந்தகத்தில் ஜானகி ராமனும் போட்டியிடுவார்கள் என சீமான் அறிவித்துள்ளார். இதனால் இரு இடைத்தேர்தல்களிலும் 5 முனை போட்டி நிலவி வருகிறது.

Seeman

வேட்பாளர்களை அறிவித்து சீமான் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

35. மதுராந்தகம்
கோ.ஜானகிராமன் B.E.,M.B.A.
இளநிலை பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை

101. தாராபுரம்
மு.கார்த்திகா B.E.
இளநிலை பொறியியல்

09. தட்டாஞ்சாவடி (புதுச்சேரி)
ச.கார்த்திக் குமாரி
அழகுக் கலை வல்லுநர்

Seeman

சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சீமான் குறிப்பிட்டுள்ளார்.

மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்ததும் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதை அறிந்ததும் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்ததாக கிடைத்த தகவலின்பேரில் அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்)ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனால் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது, அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக, தவெக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அதில் திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா, அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத், தாராபுரத்தில் கே.பானுமதி ஆகியோர் வேட்பாளர்கள் ஆவர்.

தவெகவை பொருத்தமட்டில் அதிமுகவில் இருந்து இணைந்த மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியிலும் சத்தியபாமா தாராபுரம் தொகுதியிலும் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளனர். அது போல் இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பது குறித்து மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் இன்று அறிவித்திருந்தது. அதில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்டும் தாராபுரத்தில் கம்யூனிஸ்ட்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+