வரலாறு தெரியாத சின்ன புள்ள.. மன்னிச்சு விட்டுடலாம்.. ஓபி ரவீந்திரநாத் குறித்து சீமான்
Recommended Video
சென்னை: ஒபி ரவீந்திரநாத் இந்துக்களாய் ஒன்றிணைவோம் என கருத்து தெரிவித்ததை பற்றிய கேள்விக்கு, 'வரலாறு தெரியாத சின்ன புள்ள, ஆர்வக்கோளாறான பேச்சு, மன்னித்து விட்டு விடலாம் அவருக்கு ஒன்றும் தெரியல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத்திட்டம் மற்றும் பனைத் திட்டங்களின் முன் மாதிரி முன்னெடுப்பாக ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை கோவிலம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள நாராயணபுரம் ஏரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனைகளை விதைத்து இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சந்திரயான் 2 தோல்வி அல்ல
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம்: சந்திராயன் 2 தோல்வி அடைந்து இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த சீமான், "இதை தோல்வியாக பார்க்கக் கூடாது, முயற்சி ஓர் வெற்றி, முயன்று பார்க்காமல் தோற்றால் தான் அது தோல்வி, தற்போது நடைபெற்ற தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்த முயற்சியில் வெற்றி அடைவார்கள். அந்த வலிமையும் ஆற்றலும் தமிழர்களுக்கு உண்டு என்றார்.

திசை திருப்பும் முயற்சி
பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் கூறியதை வைத்து எச் ராஜா மோடி தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பவர் என டிவிட் செய்துள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் சீமானிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த சீமான், எல்லோரின் கவனத்தையும் திருப்பி பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பும் முயற்சி என்றார்.

மன்னித்து விடலாம்
ஒபிஎஸ் மகனும் தேனி தொகுதி எம்பியுமான ஒபி ரவீந்திரநாத் இந்துக்களாய் ஒன்றிணைவோம் என கருத்து தெரிவித்ததை பற்றிய கேள்விக்கு, 'வரலாறு தெரியாத சின்ன புள்ள, ஆர்வக்கோளாறான பேச்சு, மன்னித்து விட்டு விடலாம் அவருக்கு ஒன்றும் தெரியல. அமைச்சர் பதவிக்காக கூட அப்படி பேசலாம். அதை நாம் முக்கியதுவம் தர தேவையில்ல என சீமான் கூறினார்.

ஆளுநர் பதவி ஏன்
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் குறித்த கேள்விக்கு, நிர்வாகத்தின் தலையீடு என்று ஒற்றை வரியில் சீமான் முடித்துக் கொண்டார். பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஆளுநரானது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான்,
தமிழிசை சௌந்திரராஜனுக்கு ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது. அதை ஓர் அங்கீகாரம், அதிகாரம் என பேசி கொண்டு இருகிறீர்கள். கட்சியில் வேறு தலைவரை நியமிக்க பிரச்சனை வரக் கூடாது என ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். ஒரே நாடு ஓரே ரேஷன் கார்டு திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், 'இது ஓர் சாபக்கேடு' என்றார்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications