என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளராக சீமான்? பிரதமர் மோடி பிளானாம்! சீக்ரட் சொல்லும் அரசியல் விமர்சகர்
சென்னை: சீமான் - பாஜக இடையேயான நெருக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தனித்துப் போட்டி எனச் சொல்லும் சீமானை தங்கள் வழிக்குக் கொண்டு வர பிரதமர் மோடி முயற்சித்து வருவதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போர்க்களத்தில் நிற்கக்கூடிய தளபதியாக பார்ப்பதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அதே மேடையில் "தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி இருக்கிறது, அந்தக் கட்சி வளர்கிறது என்று தன்னுடைய செயல்களால் நிகழ்த்திக் காட்டியவர் என் அன்பு இளவல் அண்ணாமலை" என்று பேசினார்.

பாஜக - சீமான்
மேலும், "உலகம் முழுக்கச் செல்லும் பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும், உலகின் முதல் மொழியான தமிழ் மொழி, எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை எனக் கூறுகிறார். செல்லும் இடமெல்லாம் தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்திப் பிடிக்கிறார்." என்றும் பாராட்டியுள்ளார் சீமான்.
அண்மையில் சீமான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் பரவிய நிலையில் இந்த தகவலை சீமான் மறுத்தார். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சீமான் பேச்சுகள், பாஜகவின் நகர்வுகள் பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து நமது ஒன் இந்தியா தமிழுடன் அலசுகிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
ரவீந்திரன் துரைசாமி பேட்டி
கேள்வி: "எனக்கும் சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை" என்கிறார் அண்ணாமலை. இன்னொருபுறம் பிரதமர் மோடியை புகழ்கிறார் சீமான். மறுபக்கம் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி மோதல் நீண்டுகொண்டே சொல்கிறது.
ரவீந்திரன் துரைசாமி: நாமே மாற்று நாம் தமிழரே மாற்று என 234 தொகுதிகளிலும் தனித்து நிற்பதால் தான் சீமானை மக்கள் நம்புகிறார்கள். சீமான் இனிமேலும் தனித்துத்தான் நிற்பார். இப்போது எடப்பாடி பழனிசாமியின் இமேஜ் அடிவாங்கிவிட்டது. அமித் ஷாவை பார்த்ததால், இனி பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என அவர்களால் சொல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமி பலவீனப்பட்டு விட்டார்.
எடப்பாடியை பலவீனப்படுத்திய சீமான்
சீமான், கமல்ஹாசன், டிடிவி தினகரனை முன்பு பலவீனப்படுத்தியது போல இப்போது எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்திவிட்டார். அமித் ஷாவிடம் சென்று சந்தித்ததால், எடப்பாடி பழனிசாமி மீதான மக்களின் அபிமானம் குறைந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி பாஜக உடனான ஆப்ஷனை திறந்து உள்ளதற்கு காரணமே, செங்கோட்டையன், அண்ணாமலையின் முக்கியத்துவத்தைக் குறைக்கவும், விஜய் மீதான எதிர்பார்ப்பைக் குறைக்கவும், பாமகவின் முக்கியத்துவத்தைக் குறைக்கவும் தான்.
லாபத்தில் எது அதிக லாபம், நஷ்டத்தில் எது குறைந்த நஷ்டம் என்று பார்த்துத்தான் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை பார்த்துள்ளார். இது சீமானுக்கும் பெரிய லாபத்தை கொடுத்திருக்கிறது. சீமான் தனித்து நிற்பதைத்தான் ஹீரோயிசம் எனப் பாராட்டி இருக்கிறார். வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் சீமான் உறுதியாக தனித்து நிற்பார்.
பிரதமர் மோடியின் பிளான்
கேள்வி: பாஜக சீமானை தங்கள் தீம் பார்ட்னர் என்கிறார்கள். 2026 தேர்தலில் சீமான் எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனித்து நிற்பார் என உறுதியாகச் சொல்ல முடியுமா?
ரவீந்திரன் துரைசாமி: என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக சீமானை முன்னிறுத்தலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். அண்ணாமலை எல்லா விஷயத்தையுமே பிரதமரிடம் தெரிவித்துவிட்டுத் பேசுகிறார். பணம் கொடுக்காமல் ஓட்டு வாங்குபவர் சீமான் எனச் சொல்கிறார் அண்ணாமலை. திராவிடக் கட்சிகளை எதிர்த்து நின்றால் உங்களுக்கு பிரச்சனைகள் வரும், அண்ணா ஃபைட் பண்ணுங்க என்று சொல்கிறார்.
கட்சி பலமின்றியே பெரிய தலைவராக சீமான் நிற்கிறார். அவர் ஒரு மாயாவதி, நிதிஷ் குமார் போல பாஜகவுக்கு 2029ல் தேவைப்படுவார். பெரிய கட்சியான பாஜக, சிறிய கட்சியான ஜேடியு நிதிஷ் குமாரை முன்னிறுத்தியது போல, சீமானை முன்னிறுத்தும் திட்டமும் பிரதமர் மோடிக்கு உள்ளது. அதைத்தான் அண்ணாமலை பிரதிபலிக்கிறார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications