Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் சொல்லலை! ஆர்டர் காப்பியை காட்டுங்க! சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் எதுவும் கூறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். அந்த தீர்ப்பை காட்டுமாறும் நிருபர்களிடம் சீமான் கேட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசுகையில், நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அப்படியெல்லாம் எதுவும் கூறவில்லை. நீங்களாக எதையும் பேச வேண்டாம்.

seeman ntk vijayalakshmi

நீதிமன்றம் அவ்வாறு கூறியதா? என கேள்வி எழுப்பினார். மேலும் அந்தத் தீர்ப்பைக் காண்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

வழக்கின் வரலாறு மற்றும் முக்கிய சம்பவங்கள்

2011: நடிகை விஜயலட்சுமி, சீமானை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் முதல் புகாரை அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2012: விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெறுவதாகக் கூறினார். இருப்பினும், காவல்துறை வழக்கை முடித்து வைக்கவில்லை.

ஆகஸ்ட் 2023: நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகாரை அளித்தார். அதில், தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.

செப்டம்பர் 2023: இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நேரடியாக ஆஜராகவில்லை.

பிப்ரவரி 2025: சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, விசாரணை தொடர உத்தரவிட்டது.

மார்ச் 2025: சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம், சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த விவகாரம் குறித்து இருதரப்பினரும் பேசி தீர்வு காண முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தியது.

செப்டம்பர் 2025: உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அமர்வு, நடிகை விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அப்படி செய்யத் தவறினால் சீமானுக்கு எதிரான கைதுக்கான தடையை நீக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. மேலும், இருதரப்பினரும் சுமூகமாகச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

வழக்கின் தற்போதைய நிலை

இந்த வழக்கில் இதுவரை இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சீமான் மன்னிப்பு கோரினால், அவரது மனு மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

அடுத்த விசாரணைத் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாததால், காவல்துறை விசாரணையும் முழுமையாக முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+