உதயநிதி துணை முதல்வர் பதவி.. முதல்வர் ஸ்டாலின் பதிலுக்கு 'சீமான்' சொன்ன கருத்து என்ன தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது தொடர்பான கோரிக்கைகளுக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை என கூறியிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்தை கிண்டலடித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. திமுக ஆட்சியில் 2022-ம் ஆண்டு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது முதலே, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்கிற பேச்சு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார்; அப்போது அமைச்சரவை மாற்றம் இருக்கும்; உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனவும் அவ்வப்போது பேசப்பட்டும் வருகிறது. இதனை அமைச்சர் உதயநிதி தரப்பும் நிராகரித்து பதில் தந்து வருகிறது.
இந்த பின்னணியில் கடந்த வாரம் தமது கொளத்தூர் சட்டசபை தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.. முதல்வர் இதை பரிசீலனை செய்வாரா? என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை என்றார். அதாவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க காலம் உருவாகவில்லை என்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் பார்க்கப்பட்டது.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கான துணை முதல்வர் பதவி குறித்த 'கோரிக்கை வலுத்துள்ளதே.. பழுக்கவில்லை என்ற முதல்வர் ஸ்டாலின் கருத்து பற்றி சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு சீமான் அளித்த பதில்: புகை போடனும் .. இல்லைன்னா வைக்கோலில் வைத்து கட்டி வைக்கனும். நாங்கள் எல்லாம் மாம்பழத்தை.. எங்க தோட்டத்தில் மாம்பழத்தை பழுக்க வைக்க.. புகை போடுவதில்லை.. வைக்கோலில் கட்டி வைத்து பழுக்க வைப்போம்.. அந்த மாதிரி தம்பி (உதயநிதியை) கட்டி வையுங்க.. பழுத்துருவார் என கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications