உலகை ஆளும் அறிவு எங்களுக்கு இருக்கு..இன்னொருவர் மூளைக்கு வேலை செய்ய முடியாது: பிகே குறித்து சீமான்
சென்னை: உலகையே ஆளும் அறிவு எங்களுக்கு இருக்கிறது; நாங்கள் அறிவின்மை கொண்டவர்கள் இல்லை என தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சீமான் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, பிரஷாந்த் கிஷோர் போன்று தேர்தல் வியூக வல்லுநர் ஒருவரை நாம் தமிழர் கட்சி நியமிக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சீமான் அளித்த பதில்:
உலகையே ஆளுகிற அறிவு எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் ஒன்றும் அறிவின்மை கொண்டவர்கள் அல்ல. இன்னொருவர் மூளைக்கு எங்களால் வேலை செய்ய முடியாது.
உள்ளத்தூய்மையுடன் மக்களுக்கு சேவை புரிய வந்துள்ளோம். திமுக இதனை செய்திருந்தால் பிரஷாந்த் கிஷோர் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்காது. தங்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் இன்னொருவரை திமுக கூலிக்கு வைத்துள்ளது.
இவ்வாறு சீமான் கூறினார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications