எதே.. பாஜகவின் சொந்த சொத்தா ராமர்? எங்களுக்கும்தான் கடவுள்... அமித்ஷா அறிவிப்பால் கொந்தளித்த சீமான்
சென்னை: கடவுள் ராமர் என்ன பாஜகவின் பிராப்பர்டியா? எங்களுக்கும் தான் கடவுள்.. உங்களுக்கும்தானே கடவுள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் நேற்று பிரசாரம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ராமர் கோவில் தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவர் என வாக்குறுதி அளித்திருந்தார்.

சென்னையில் இன்று மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவை சீமான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அமித்ஷாவின் வாக்குறுதி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்த பதில்: கடைசியாக அமித்ஷாவும் இலவசம் என பேசியிருக்கிறார். அவங்க என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க..? பிஜேபியின் பிராப்பர்ட்டியா ராமர்?
எனக்கு கடவுள் உங்களுக்கு கடவுள் இல்லையா? இறைவனையே இலவசமாக்கிட்டானுங்க இவனுக ஆட்சியில்.. என்ன கொடுமை பாருங்க.. இவ்வளவு ஒரு இழிவான அரசியல் நிலையை எங்கயாவது பார்த்திருக்கீங்களா? அய்யோ.. அய்யோ...
அதேபோல் தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்வியையும் சீமானிடம் செய்தியாளர்கள் எழுப்பி இருந்தனர். இதற்கு சீமான் அளித்த பதில்: அவருக்கு தெரியும்... நடக்கப் போறது இல்லைன்னு தெரியும். நான் கூட அறிவிப்பேன் பார்த்தீர்களா? ரூ1,000 கோடி தருவேன்னு திடீரெனு அறிவிப்பேன். நடக்காது என அவருக்கு தெரியும்.. பெரியார் சிலையை வந்தால் எடுப்போம் என்பதும் அப்படித்தான். இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications