கோவையில் தந்தை பெரியார் சிலை மீது காவிச்சாயம்.. சீமான் கடும் கண்டனம்
சென்னை: கோவையில் தந்தை பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரிக்கின்றனர் என புகார் கூறப்பட்டது. கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டதாகவும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக செந்தில்வாசன், சுரேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கறுப்பர் கூட்டத்தின் பதிவுகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கோவையில் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் போலீசில் சரண் அடைந்துள்ளார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கோவையில் ஐயா பெரியார் சிலை மீது காவிச்சாயத்தை வீசி அவரைக் கொச்சைப்படுத்த முயலும் சமூக விரோதிகளின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்கோடு அக்கொடுஞ்செயலைப் புரிந்தவர் எவராயினும் அவரை கடுஞ்சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சுப.வீ. கண்டனம்
இதேபோல் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமது ட்விட்டர் பக்கத்தில், தங்கள் தலைவர்களின் படங்களுக்குத் தங்கள் கட்சியின் வண்ணம் பூசிப் பார்த்திருக்கிறோம். சரியான தலைவர்களே இல்லாத கட்சியினர் என்ன செய்வார்கள் பாவம், அடுத்த கட்சித் தலைவர் சிலையில் தங்கள் கட்சித் சாயத்தைப் பூசுவார்கள் போலிருக்கிறது என கூறியுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications